[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

கிளீசு 581 ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளீசு 581 ஜி
Gliese 581 g
புறக்கோள் புறக்கோள்களின் பட்டியல்

எமது சூரிய மண்டலத்துடன் ஒப்பிட்டு கிளீசு மண்டலத்தில் சுற்றிவரும் கோள்கள்
தாய் விண்மீன்
விண்மீன் கிளீசு 581
விண்மீன் தொகுதி துலா (விண்மீன் கூட்டம்)
வலது ஏறுகை (α) 15h 19m 26s
சாய்வு (δ) −07° 43′ 20″
தோற்ற ஒளிப்பொலிவு (mV) 10.55
தொலைவு20.3 ± 0.3 ஒஆ
(6.2 ± 0.1 புடைநொடி)
அலைமாலை வகை M3V
சுற்றுவட்ட இயல்புகள்
அரைப் பேரச்சு(a) 0.146[1] AU
சுற்றுக்காலம்(P)36.6[1] நா
இருப்புசார்ந்த இயல்புகள்
மிகக்குறைந்த திணிவு(m sin i)3.1 – 4.3[1] M
ஆரை(r)1.3 – 2.0[1] R
மேற்பரப்பு ஈர்ப்பு(g)1.1 – 1.7[1] g
கண்டுபிடிப்பு
கண்டறிந்த நாள் செப்டம்பர் 29, 2010
கண்டுபிடிப்பாளர்(கள்) ஸ்டீவன் வோட் மற்றும் பலர்.
கண்டுபிடித்த முறை ஆர வேகம்
கண்டுபிடித்த இடம் கெக் அவதானநிலையம், ஹவாய்
கண்டுபிடிப்பு நிலை
Database references
புறக்கோள்களின்
கலைக்களஞ்சியம்
தரவு
SIMBADதரவு

கிளீசு 581 ஜி (Gliese 581 g, ˈɡliːzə, அல்லது Gl 581 g[2], என்பது கிளீசு 581 என்ற செங்குள்ள விண்மீனைச் சுற்றிவரும் ஒரு புறக்கோள் ஆகும். இது எமது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 20.5 ஒளியாண்டுகள் (193 திரில்லியன் கிமீ) தூரத்தில் துலா என்ற விண்மீன் குழுமத்தில் காணப்படுகிறது. கிளீசு 581 என்ற கோள் கூட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 6வது கோளும், இக்கூட்டத்தில் அதன் விண்மீனில் இருந்து நான்காவதாக உள்ள கோளும் ஆகும். இக்கோள் அதன் சூரியனில் இருந்து “உயிரினங்கள் வாழக்கூடிய” அளவு தூரத்தில் அமைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன[1] இதனால் திரவ நிலையில் உள்ள நீர் இங்கு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது[3].

கிளீசு 581 ஜி என்ற இந்தக் கோளை பல ஆண்டுகளாக அறிவியலாளர்கள் அவதானித்திருந்தாலும், 2010 செப்டம்பர் 29 இலேயே இக்கண்டுபிடிப்பு பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்[1]. புவியை அதிக அளவில் ஒத்ததும், உயிரினம் வாழக்கூடிய நிலையில் இருப்பதுமான ஒரு புறக்கோள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்[4].

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Vogt, Steven S.; Butler, R. Paul; Rivera, Eugenio J.; Haghighipour, Nader; Henry, Gregory W.; Williamson, Michael H. (2010-09-29). "The Lick-Carnegie Exoplanet Survey: A 3.1 M_Earth Planet in the Habitable Zone of the Nearby M3V Star Gliese 581". accepted by the Astrophysical Journal. http://arxiv.org/abs/1009.5733. பார்த்த நாள்: 2010-09-29. 
  2. Borenstein, Seth (2010-09-29). "Could 'Goldilocks' planet be just right for life?". அசோசியேட்டட் பிரெசு இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 10, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101010113717/http://hosted.ap.org/dynamic/stories/U/US_SCI_NEW_EARTHS?SITE=ILMOL&SECTION=HOME&TEMPLATE=DEFAULT. பார்த்த நாள்: September 30, 2010. 
  3. Shiga, David (2010-09-29). "Found: first rocky exoplanet that could host life". New Scientist. http://www.newscientist.com/article/dn19519-found-first-rocky-exoplanet-that-could-host-life.html. பார்த்த நாள்: September 30, 2010. 
  4. "Just-right planet that can support life detected". ராய்ட்டர்ஸ், USA. September 29, 2010. பார்க்கப்பட்ட நாள் September 30, 2010.


வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளீசு_581_ஜி&oldid=4105196" இலிருந்து மீள்விக்கப்பட்டது