[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

2015 ஆசியக் கிண்ணம் (காற்பந்து)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2015 ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு ஆசியக் கிண்ணம்
AFC Asian Cup
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுஆத்திரேலியா
நாட்கள்9 – 31 சனவரி
அணிகள்16
அரங்கு(கள்)(5 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் ஆத்திரேலியா (1-ஆம் தடவை)
இரண்டாம் இடம் தென் கொரியா
மூன்றாம் இடம்ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய அரபு அமீரகம்
நான்காம் இடம்ஈராக் ஈராக்
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்32
எடுக்கப்பட்ட கோல்கள்85 (2.66 /ஆட்டம்)
பார்வையாளர்கள்6,49,705 (20,303/ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்)ஐக்கிய அரபு அமீரகம் அலி மப்கூட்
(5 கோல்கள்)
சிறந்த ஆட்டக்காரர்ஆத்திரேலியா மசீமோ லுவோங்கோ
சிறந்த கோல்காப்பாளர்ஆத்திரேலியா மெத்தியூ ராயன்
2011
2019

2015 கால்பந்து ஆசியக் கிண்ணம் (2015 AFC Asian Cup) என்பது ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட 16வது பன்னாட்டு ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டித் தொடராகும். இப்போட்டித் தொடர் ஆத்திரேலியாவில் 2015 சனவரி 9 முதல் 31 வரை நடைபெற்றது.[1] இறுதிப் போட்டியில் ஆத்திரேலிய அணி தென்கொரிய அணிக்கெதிராக விளையாடி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2015 ஆசியக்கிண்ணத்தை வென்றது. இதன் மூலம், 2017 ஆம் ஆண்டில் உருசியாவில் நடைபெறவிருக்கும் உலகக்கிண்ணக் கால்பந்து இறுதிப் போட்டியில் பங்குபெற்றத் தகுதி பெற்றது.

ஆத்திரேலியாவில் நடைபெற்ற முதலாவது ஆசியக் கிண்ணப்போட்டித் தொடர் இதுவாகும். அத்துடன் ஆசியா கண்டத்திற்கு வெளியே நடைபெற்ற முதலாவது ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரும் இதுவாகும். 2015 ஆசியக் கிண்ணத்திற்கான போட்டிகள் ஆத்திரேலியாவின் சிட்னி, மெல்பேர்ண், பிரிஸ்பேன், கான்பரா நியூகாசில் ஆகிய ஐந்து நகரங்களில் நடைபெற்றன. 16 நாடுகள் இத்தொடரில் பங்குபற்றின. போட்டிகள் நடைபெற்ற நாடு என்ற முறையில், ஆத்திரேலிய அணி இத்தொடரின் இறுதிச் சுற்றில் விளையாட நேரடியாகத் தகுதி பெற்றது. சப்பான், தென் கொரியா ஆகியன 2011 ஆசியக் கிண்ணப் போட்டியில் இருந்து நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டன. 13 நாடுகள் 2013 பெப்ரவரி முதல் 2014 மார்ச் வரை நடைபெற்ற ஆரம்பக் கட்டப் போட்டிகளில் பங்கு பற்றி தகுதி பெற்றன.

2011 ஆசியக்கிண்ணப் போட்டியில் சப்பான் அணி வெற்றி பெற்று கோப்பையைத் தக்க வைத்துக் கொள்ள விளையாடியது. ஆனாலும், காலிறுதிப் போட்டியிலேயே அது தோல்வி அடைந்து வெளியேறியது.[2]

  ஆசியக்கிண்ணத்திற்குத் தகுதி பெற்றவை
  தகுதி பெறாதவை

போட்டியிடும் அணிகள்

[தொகு]

பின்வரும் 16 அணிகள் இத்தொடரில் பங்குபற்ற தகுதி பெற்றன:

நாடு தகுதி பெற்ற நாள் முன்னர் பங்குபற்றிய ஆண்டுகள்1
 ஆத்திரேலியா 5 சனவரி 2011 2 (2007, 2011)
 சப்பான் 25 சனவரி 2011 7 (1988, 1992, 1996, 2000, 2004, 2007, 2011)
 தென் கொரியா 28 சனவரி 2011 12 (1956, 1960, 1964, 1972, 1980, 1984, 1988, 1996, 2000, 2004, 2007, 2011)
 வட கொரியா 19 மார்ச் 2012 3 (1980, 1992, 2011)
 பகுரைன் 15 நவம்பர் 2013 4 (1988, 2004, 2007, 2011)
 ஐக்கிய அரபு அமீரகம் 15 நவம்பர் 2013 8 (1980, 1984, 1988, 1992, 1996, 2004, 2007, 2011)
 சவூதி அரேபியா 15 நவம்பர் 2013 8 (1984, 1988, 1992, 1996, 2000, 2004, 2007, 2011)
 ஓமான் 19 நவம்பர் 2013 2 (2004, 2007)
 உஸ்பெகிஸ்தான் 19 நவம்பர் 2013 5 (1996, 2000, 2004, 2007, 2011)
 கத்தார் 19 நவம்பர் 2013 8 (1980, 1984, 1988, 1992, 2000, 2004, 2007, 2011)
 ஈரான் 19 நவம்பர் 2013 12 (1968, 1972, 1976, 1980, 1984, 1988, 1992, 1996, 2000, 2004, 2007, 2011)
 குவைத் 19 நவம்பர் 2013 9 (1972, 1976, 1980, 1984, 1988, 1996, 2000, 2004, 2011)
 யோர்தான் 4 பெப்ரவரி 2014 2 (2004, 2011)
 ஈராக் 5 மார்ச் 2014 7 (1972, 1976, 1996, 2000, 2004, 2007, 2011)
 சீனா 5 மார்ச் 2014 10 (1976, 1980, 1984, 1988, 1992, 1996, 2000, 2004, 2007, 2011)
 பலத்தீன் 30 மே 2014 0 (முதற்தடவை)
1 தடித்த எழுத்துகள் அவ்வாண்டில் வெற்றி பெற்ற அணியைக் குறிக்கும்.

இறுதிச் சுற்று

[தொகு]
இறுதிச் சுற்றுக்கான அணிகள வரிசைப் படுத்தும் தேர்வு சிட்னி ஒப்பேரா மாளிகையில் நடைபெற்றது.

இறுதிச் சுற்றுக்கான அணிகளை வரிசைப்படுத்தும் தேர்வு சிட்னி ஒப்பேரா மாளிகையில் 2014 மார்ச் 26 ஆம் நாள் இடம்பெற்றது.[3] குழு நிலைப் போட்டிகளில் 16 நாடுகளும் நான்கு குழுக்களில் இடம்பெற்றன.[4] மார்ச் 2014 பிஃபா உலகத் தரவரிசையின் படி அணிகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. தொடரை நடத்தும் ஆத்திரேலிய அணி முதல் குழுவில் ஏ1 வரிசையில் இடப்பட்டது.[5]

குழு 1 குழு 2 குழு 3 குழு 4

 ஆத்திரேலியா (63)
 ஈரான் (42)
 சப்பான் (48)
 உஸ்பெகிஸ்தான் (55)

 தென் கொரியா (60)
 ஐக்கிய அரபு அமீரகம் (61)
 யோர்தான் (66)
 சவூதி அரேபியா (75)

 ஓமான் (81)
 சீனா (98)
 கத்தார் (101)
 ஈராக் (103)

 பகுரைன் (106)
 குவைத் (110)
 வட கொரியா (133)
 பலத்தீன் (167)

இடங்கள்

[தொகு]

அரங்குகள்

[தொகு]

சிட்னி, மெல்பேர்ண், பிரிஸ்பேன், கான்பரா, நியூகாசில் ஆகிய நகரங்களின் ஐந்து அரங்குகளில் போட்டிகள் இடம்பெறுகின்றன.[6]

சிட்னி நியூகாசில் பிரிஸ்பேன்
ஆத்திரேலியா விளையாட்டரங்கம் நியூகாசில் அரங்கு பிறிஸ்பேன் அரங்கம்
இருக்கைகள்: 84,000 இருக்கைகள்: 33,000 இருக்கைகள்: 52,500
கான்பரா
கான்பரா விளையாட்டரங்கம்
இருக்கைகள்: 25,011
மெல்பேர்ண்
மெல்பேர்ண் நாற்சதுர விளையாட்டரங்கம்
இருக்கைகள்: 30,050

குழு நிலை

[தொகு]

குழு ஏ

[தொகு]
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 தென் கொரியா 3 3 0 0 3 0 +3 9
 ஆத்திரேலியா 3 2 0 1 8 2 +6 6
 ஓமான் 3 1 0 2 1 5 −4 3
 குவைத் 3 0 0 3 1 6 −5 0
ஆத்திரேலியா 4–1 குவைத்
காகில் Goal 33'
லுவோங்கோ Goal 45'
ஜெடினாக் Goal 62' (தண்ட உதை)
துரொய்சி Goal 90+2'
அறிக்கை ஃபாடெல் Goal 8'
பார்வையாளர்கள்: 25,231
நடுவர்: ரவ்ஷான் இர்மாத்தொவ் உஸ்பெகிஸ்தான்
10 சனவரி 2015
தென் கொரியா  1–0  ஓமான் கான்பரா விளையாட்டரங்கம், கான்பரா
13 சனவரி 2015
 குவைத் 0-1  தென் கொரியா கான்பரா விளையாட்டரங்கம், கான்பரா
 ஓமான் 0-4  ஆத்திரேலியா ஆத்திரேலியா விளையாட்டரங்கம், சிட்னி
17 சனவரி 2015
ஆத்திரேலியா  0-1  தென் கொரியா பிறிஸ்பேன் அரங்கம், பிரிஸ்பேன்
 ஓமான் 1-0  குவைத் நியூகாசில் அரங்கு, நியூகாசில்

குழு பி

[தொகு]
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 சீனா 3 3 0 0 5 2 +3 9
 உஸ்பெகிஸ்தான் 3 2 0 1 5 3 +2 6
 சவூதி அரேபியா 3 1 0 2 5 5 0 3
 வட கொரியா 3 0 0 3 2 7 −5 0
10 சனவரி 2015
 உஸ்பெகிஸ்தான் 1–0  வட கொரியா ஆத்திரேலியா விளையாட்டரங்கம், சிட்னி
 சவூதி அரேபியா 0–1  சீனா பிறிஸ்பேன் அரங்கம், பிரிஸ்பேன்
14 சனவரி 2015
 வட கொரியா 1-4  சவூதி அரேபியா மெல்பேர்ண் நாற்சதுர விளையாட்டரங்கம், மெல்பேர்ண்
 சீனா 2-1  உஸ்பெகிஸ்தான் பிறிஸ்பேன் அரங்கம், பிரிஸ்பேன்
18 சனவரி 2015
 உஸ்பெகிஸ்தான் 3-1  சவூதி அரேபியா மெல்பேர்ண் நாற்சதுர விளையாட்டரங்கம், மெல்பேர்ண்
 சீனா 2-1  வட கொரியா கான்பரா விளையாட்டரங்கம், கான்பரா

குழு சி

[தொகு]
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 ஈரான் 3 3 0 0 4 0 +4 9
 ஐக்கிய அரபு அமீரகம் 3 2 0 1 6 3 +3 6
 பகுரைன் 3 1 0 2 3 5 −2 3
 கத்தார் 3 0 0 3 2 7 −5 0
11 சனவரி 2015
 ஐக்கிய அரபு அமீரகம் 4-1  கத்தார் கான்பரா விளையாட்டரங்கம், கான்பரா
ஈரான்  2-0  பகுரைன் மெல்பேர்ண் நாற்சதுர விளையாட்டரங்கம், மெல்பேர்ண்
15 சனவரி 2015
 பகுரைன் 1-2  ஐக்கிய அரபு அமீரகம் கான்பரா விளையாட்டரங்கம், கான்பரா
 கத்தார் 0-1  ஈரான் ஆத்திரேலியா விளையாட்டரங்கம், சிட்னி
19 சனவரி 2015
ஈரான்  1-0  ஐக்கிய அரபு அமீரகம் பிறிஸ்பேன் அரங்கம், பிரிஸ்பேன்
 கத்தார் 1-2  பகுரைன் ஆத்திரேலியா விளையாட்டரங்கம், சிட்னி

குழு டி

[தொகு]
அணி வி
வெ

தோ
கோ.அ
எ.கோ
கோ.வி
பு
 சப்பான் 3 3 0 0 7 0 +7 9
 ஈராக் 3 2 0 1 3 1 +2 6
 யோர்தான் 3 1 0 2 5 4 +1 3
 பலத்தீன் 3 0 0 3 1 11 −10 0
12 சனவரி 2015
சப்பான்  4-0  பலத்தீன் நியூகாசில் அரங்கு, நியூகாசில்
 யோர்தான் 0-1  ஈராக் பிறிஸ்பேன் அரங்கம், பிரிஸ்பேன்
16 சனவரி 2015
 பலத்தீன் 1-5  யோர்தான் மெல்பேர்ண் நாற்சதுர விளையாட்டரங்கம், மெல்பேர்ண்
 ஈராக் 0-1  சப்பான் பிறிஸ்பேன் அரங்கம், பிரிஸ்பேன்
20 சனவரி 2015
சப்பான்  2-0  யோர்தான் மெல்பேர்ண் நாற்சதுர விளையாட்டரங்கம், மெல்பேர்ண்
 ஈராக் 2-0  பலத்தீன் கான்பரா விளையாட்டரங்கம், கான்பரா

ஆட்டமிழக்கும் நிலை

[தொகு]

இச்சுற்றுப் போட்டியில், தேவையேற்படின் கூடுதல் நேரம், மற்றும் சமன்நீக்கி மோதல் ஆகிய முறைகளில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர்.[7]


காலிறுதி அரையிறுதி இறுதிப்போட்டி
                   
22 சனவரி – மெல்பேர்ண்        
  தென் கொரியா (கூநே)  2
26 சனவரி – சிட்னி
  உஸ்பெகிஸ்தான்  0  
  தென் கொரியா  
23 சனவரி – கான்பரா
      ஈராக்    
  ஈரான்  3 (6)
31 சனவரி – சிட்னி
  ஈராக் (தண்.)  3 (7)  
 ஆட்டம் 29 இன் வெற்றியாளர்  
22 சனவரி – பிரிஸ்பேன்    
   ஆட்டம் 30 இன் வெற்றியாளர்  
  சீனா  0
27 சனவரி – நியூகாசில்
  ஆத்திரேலியா  2  
  ஆத்திரேலியா   மூன்றாவது இடத்தில்
23 சனவரி – சிட்னி
      ஐக்கிய அரபு அமீரகம்     30 சனவரி – நியூகாசில்
  சப்பான்  1 (4)
 ஆட்டம் 29 இல் தோற்றவர்  
  ஐக்கிய அரபு அமீரகம் (தண்.)  1 (5)  
 ஆட்டம் 30 இல் தோற்றவர்  
 


காலிறுதிப் போட்டிகள்

[தொகு]
 சீனா0–2 ஆத்திரேலியா
அறிக்கை காகில் Goal 48'65'
பார்வையாளர்கள்: 46,067
நடுவர்: கிம் ஜொங்-ஹெயோக் ( தென் கொரியா )

 ஈரான்3–3 (கூ.நே) ஈராக்
அஸ்மூன் Goal 24'
பௌராலிகாஞ்சி Goal 103'
கூச்சனெச்காது Goal 119'
அறிக்கை யாசின் Goal 56'
மகுமூது Goal 93'
இசுமாயில் Goal 116' (தண்ட உதை)
ச.நீ
அச்சாஃபி Penalty missed
பௌராலிகாஞ்சி Penalty scored
நெகௌனாம் Penalty scored
ஒசெய்னி Penalty scored
கபூரி Penalty scored
ஜகன்பாக்சு Penalty scored
தெமூரியான் Penalty scored
அமீரி Penalty missed
6–7 Penalty missed அப்துல் அமீர்
Penalty scored சாலிம்
Penalty scored இசுமாயில்
Penalty scored அட்னன்
Penalty scored மகுமுது
Penalty scored காசிம்
Penalty scored உசைன்
Penalty scored சாக்கர்
பார்வையாளர்கள்: 18,921
நடுவர்: பென் வில்லியம்சு ( ஆத்திரேலியா)

சப்பான் 1–1 (கூ.நே) ஐக்கிய அரபு அமீரகம்
சிபசாக்கி Goal 81' அறிக்கை மப்கூட் Goal 7'
ச.நீ
ஒண்டா Penalty missed
அசிபி Penalty scored
சிபசாக்கி Penalty scored
டொயோடா Penalty scored
மொரிசிக் Penalty scored
ககவா Penalty missed
4–5 Penalty scored ஓ. அப்துல்ரகுமான்
Penalty scored மப்கூட்
Penalty missed எசுமாயெல்
Penalty scored அசன்
Penalty scored பர்தான்
Penalty scored ஐ. அகமது
பார்வையாளர்கள்: 19,094
நடுவர்: அலிரேசா பகானி ( ஈரான்)

அரை-இறுதிப் போட்டிகள்

[தொகு]
தென் கொரியா 2–0 ஈராக்
லீ-உங்-இயூப் Goal 20'
கிம் யங்-குவோன் Goal 50'
அறிக்கை
பார்வையாளர்கள்: 36,053
நடுவர்: ரியூஜி சாட்டோ (யப்பான்)

ஆத்திரேலியா 2–0 ஐக்கிய அரபு அமீரகம்
செயின்சுபுரி Goal 3'
டேவிட்சன் Goal 14'
அறிக்கை
பார்வையாளர்கள்: 21,079
நடுவர்: ரவ்சான் இர்மாத்தொவ் (உஸ்பெக்கித்தான்)

மூன்றாம் நிலைக்கான போட்டி

[தொகு]

ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் இரண்டும் ஆசியக்கிண்ணத்தின் மூன்றாவது இடத்துக்காகப் போட்டியிடுவது இது இரண்டாவது தடவையாகும். இவை முறையே 1976, 1992 ஆம் ஆண்டுகளில் விளையாடின.

 ஈராக்2–3 ஐக்கிய அரபு அமீரகம்
சாலெம் Goal 28'
கலாப் Goal 42'
அறிக்கை காலில் Goal 16'51'
மாப்கூட் Goal 57' (தண்ட உதை)
பார்வையாளர்கள்: 12,829
நடுவர்: நவாப் சுக்ராலா ( பகுரைன்)

இறுதிப் போட்டி

[தொகு]

தென்கொரியா தனது மூன்றாவது ஆசியக்கிண்ண வெற்றியை எதிர்நோக்கி இவ்வாட்டத்தை ஆரம்பித்தது. அதே வேளையில், ஆத்திரேலியா தனது முதலாவது ஆசியக்கிண்ன வெற்றியை எதிர்பார்த்தது. முதல் அரை ஆட்டத்தின் இறுதியில் ஆத்திரேலியா ஒரு கோலைப் போட்டு முன்னணியில் இருந்தது, ஆனாலும் ஆட்ட இறுதி நிமிடத்தில் தென்கொரியா அணி அதனை சமன் செய்ததில், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு, ஆத்திரேலியா 2-1 என்ற கணக்கில் வென்றது.

தென் கொரியா 1–2 (கூ.நே) ஆத்திரேலியா
சொன் இயூங்மின் Goal 90+1' அறிக்கை லுவோங்கோ Goal 45'
துரொய்சி Goal 105'
பார்வையாளர்கள்: 76,385
நடுவர்: அலிரேசா ஃபகானி ( ஈரான்)

சுற்றுப் போட்டியில் அணிகளின் தரவரிசை

[தொகு]
நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோவே பு இறுதி முடிவு
1  ஆத்திரேலியா (H) 6 5 0 1 14 3 +11 15 வெற்றியாளர்
2  தென் கொரியா 6 5 0 1 8 2 +6 15 இரண்டாவது இடம்
3  ஐக்கிய அரபு அமீரகம் 6 3 1 2 10 8 +2 10 மூன்றாம் இடம்
4  ஈராக் 6 2 1 3 8 9 −1 7 நான்காம் இடம்
5  சப்பான் 4 3 1 0 8 1 +7 10 காலிறுதியில்
வெளியேறின
6  ஈரான் 4 3 1 0 7 3 +4 10
7  சீனா 4 3 0 1 5 4 +1 9
8  உஸ்பெகிஸ்தான் 4 2 0 2 5 5 0 6
9  யோர்தான் 3 1 0 2 5 4 +1 3 குழுநிலையில்
வெளியேறின
10  சவூதி அரேபியா 3 1 0 2 5 5 0 3
11  பகுரைன் 3 1 0 2 3 5 −2 3
12  ஓமான் 3 1 0 2 1 5 −4 3
13(T)  வட கொரியா 3 0 0 3 2 7 −5 0
13(T)  கத்தார் 3 0 0 3 2 7 −5 0
15  குவைத் 3 0 0 3 1 6 −5 0
16  பலத்தீன் 3 0 0 3 1 11 −10 0
மூலம்: Asian Cup Australia 2015
(H) நடத்தும் நாடு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "AFC Asian Cup 2015 venues and schedule unveiled". the-afc.com.
  2. "UAE out title defender Japan to enter in asian cup semi-final 2015". பார்க்கப்பட்ட நாள் 24 சனவரி 2015.
  3. "AFC Asian Cup draw set for March 26 at Sydney Opera House". ஏஎஃப்சி. 6 டிசம்பர் 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. "AFC Asian Cup Groups Decided". Asian Football Confederation. 26 மார்ச் 2014. Archived from the original on 2014-03-28. பார்க்கப்பட்ட நாள் 2015-01-11. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. "Asian Cup 2015 draw mechanism revealed". ஏஎஃப்சி. 17 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |date= (help)
  6. "Venues and Match Schedule" (PDF). footballaustralia.com.au. பார்க்கப்பட்ட நாள் 27 மார்ச் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "Competition Regulations – AFC Asian Cup Australia 2015" (PDF). Archived from the original (PDF) on 2015-04-18. பார்க்கப்பட்ட நாள் 2015-01-11.

வெளி இணைப்புகள்

[தொகு]
2015 ஆசியக் கிண்ணம் (காற்பந்து) பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி