[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

நபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நபி என்பது அரபிச் சொல்லாகும். இஸ்லாமிய நம்பிக்கையின்படி முதல் மனிதராக ஆதம் நபி (அலை) அவர்களை இறைவன் படைத்தான். பின் அவர்களின் விலா எலும்பில் இருந்து ஹவ்வா என்பவரை படைத்தான். பின் இவர்களின் சந்ததிகள் இந்த உலகை நிரப்பினர். அந்த மக்கள் இறைவனை மறந்து அநீதியின் பக்கம் சாயும் பொழுது, அவர்களை நல்வழிப்படுத்த இறைவன் தனது தூதர்களை அனுப்பினான். இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களையே நபி என்று முஸ்லிம்கள் அழைகின்றனர். இப்ராஃகிம்(அலை) (ஆபிரகாம்). மூஸா(அலை) (மோசே), ஈஸா(அலை)(இயேசு) ஆகியோர் நபிகளில் சிலர். முஸ்லிம்களின் நபியாக போற்றப்படும் ஈஸா(அலை) நபியையே கிறித்தவ சமயத்தோர் இறைவனாக வணங்குகின்றனர். இதன் பிறகே முஹம்மது நபி(ஸல்) இறைவனால் அனுப்பப்பட்டார். அதில் முதல் நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் கடைசி நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் இடையில் பல நபிமார்கள் தோன்றியதாக இஸ்லாம் கூறுகிறது. அவர்களில் இருபத்தைந்து நபிமார்களின் பெயர்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் இறைச்செய்தியை மனிதர்களுக்கு அறிவிக்கும் தூதர்கள் என்பதைத்தவிர சாதாரண மனிதர்களேயாகும் ஆவார்கள் என்பது முன் நம்பிக்கை ஆகும்.

திருக்குர் ஆனில் நபிமார்கள்

[தொகு]

முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனில் இருபத்தைந்து நபிமார்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

  1. ஆதம் (அலை)
  2. இத்ரீஸ் (அலை)
  3. நூஹ் (அலை)
  4. ஹுது (அலை)
  5. ஸாலிஹ் (அலை)
  6. இப்ராஹிம் (அலை)
  7. இஸ்மாயீல் (அலை)
  8. இஸ்ஹாக் (அலை)
  9. லூத் (அலை)
  10. யாகூப் (அலை)
  11. யூசுப் (அலை)
  12. ஸுஹைப் (அலை)
  13. அய்யூப் (அலை)
  14. மூஸா (அலை)
  15. ஹாரூன் (அலை)
  16. துல்கிப்ல் (அலை)
  17. தாவூத் நபி (அலை)
  18. ஸுலைமான் நபி (அலை)
  19. இல்யாஸ் (அலை)
  20. யஹ்யா (அலை)
  21. யூனுஸ் (அலை)
  22. ஸக்கரியா (அலை)
  23. அல் யசஉ (அலை)
  24. ஈஸா (அலை)
  25. முஹம்மத் (ஸல்)
    இருபத்தைந்து நபிமார்களைத் தவிர்த்து இன்னும் நான்கு பெயர்களையும்  திருக்குர்ஆன்  குறிப்பிடுகிறது. இவர்கள் இறைத்துத்தூதர்களா அல்லது அவ்வாறில்லையா என்பது குறித்து அறிஞர்களிடையே பல கருத்துக்கள் நிலவுகின்றது. அது குறித்து இறைவனே மிக நன்கறிந்தவன்.
1. துல்கர்னைன் - ( ذو القرنين ) 18:83  
2. லுக்மான் - ( لقمان الحكيم ) 31:12 
3. உஜைர் - ( عزیر ) 9:30                       
4. துப்பஃஉ- ( تُبَّعٍ ) 44:37, 50:14 
எண். பெயர் அரபு மொழியில் நபி தூதர்

(ரஸூல்)

(உலு அல்-ஆஸ்ம்) ஷரியா சட்டம் நூல் வாழ்ந்த காலம் அனுப்பிய இடம் மற்றும் அனுப்பிய குடி குறிப்பு
1 ஆதம் (அலை) آدَم [1] [1] மனிதகுலத்தின் பிறப்பு பூமி[2] முதல் நபி மற்றும் முதல் மனிதர் ஆவார்.
2 இத்ரீஸ் (அலை) إِدْرِيس [3] ? ஒருபோதும் கூறப்படவில்லை, பிற்கால வம்சங்கள்பாபிலோனைக் கோருகின்றன "உயர்த்தப்பட்டது... உயர்ந்த இடத்திற்கு".
3 நூஹ் (அலை) نُوح [4] [5] [6] [7] ஊழிவெள்ளம் நூஹ்வின் மக்கள்[8] ஊழிவெள்ளம்த்தில் உயிர் பிழைத்தவர்
4 ஹுது (அலை) هُود [9] [9] அண். 2400 BC[10] ஆத் பழங்குடி[11] வணிகர்
5 ஸாலிஹ் (அலை) صَالِح [12] [12] ? ஸமூது பழங்குடி[13] ஒட்டகம் வளர்ப்பவர்
6 இப்ராஹிம் (அலை) إِبْرَاهِيم [14] [15] [16] [7] [17] ? ஈராக் மற்றும் சிரியாவின் மக்கள்[18] கஃபா கட்டியவர்
7 லூத் (அலை) لُوط [19] [20] ? "லூத்(அலை)அவர்களின் மக்கள்[21] பாலஸ்தீனத்தில் வசிக்கவில்லை, ஆனால் அதன் குடிமக்களால் "சகோதரர்கள்" என்று இவர் கருதப்பட்டார்.
8 இஸ்மாயீல் (அலை) إِسْمَاعِيل [22] [22] ? முந்தைய் இஸ்லாமிய அரேபியா (மக்கா) அராபிய மக்களை உருவாக்கியவர்
9 இஸ்ஹாக் (அலை) إِسْحَاق [23] ? இஸ்ரவேல் மக்களின் நிறுவனர்கள்
10 யாகூப் (அலை) يَعْقُوب [23] ? இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்கள்
11 யூசுப் (அலை) يُوسُف [24] [25] ? எகிப்து தீர்க்கதரிசனத்திற்கான பரிசு பெற்றவர்.
12 அய்யூப் (அலை) أَيُّوب [24] ? பொறுமைக்கு பெயர் பெற்றவர்.[26]
13 ஸுஹைப் (அலை) شُعَيْب [27] [27] ? மீடியன்[28] ஆடு மேய்ப்பவர்
14 மூஸா (அலை) مُوسَىٰ [29] [29] [30] [7] தௌராத் பிர்அவ்ன் மற்றும் அவனது அமைப்பு[31] அண். 1400s BCE – அண். 1300s BCE, or அண். 1300s BCE – அண். 1200s BCE பிர்அவ்ன் மற்றும் அவரது அமைப்பு[32] பிர்அவ்னுக்கு சவால் விடுத்தார்; இஸ்ரேலுக்கு மீண்டும் குடியேற்றத்தை வழிநடத்தினார்.
15 ஹாரூன்

(அலை)

هَارُون [33] [29] ? பிர்அவ்ன் மற்றும் அவரது அமைப்பு மூஸாவின் சகோதரர்
16 தாவூத் (அலை) دَاوُۥد \ دَاوُود [4] [4] ஸபூர்[34] அண். 1000s BCE – அண். 971 BCE ஜெருசலம் இராணுவ தளபதி, 2 வது ஐக்கிய முடியாட்சியின் இஸ்ரேல் அரசர்
17 ஸுலைமான் (அலை) سُلَيْمَان} [4] அண். 971 BCE – அண். 931 BCE ஜெருசலம் செப்புத்தொழிலாளி, ஐக்கிய முடியாட்சியின் 3வது மற்றும் கடைசி இஸ்ரேல் அரசர்; முதல் கோயிலைக் கட்டினார்; தாவூத் (அலை)அவர்களின் மகன்.
18 இல்யாஸ் (அலை) إِلْيَاس [4] [35] ? "இல்யாஸின் மக்கள்"[36]

(இஸ்ரவேலர்)

பட்டு நெசவாளர்
19 அல்யாசா (அலை) ٱلْيَسَع [4] ? இஸ்ரவேலர்
20 யூனுஸ் (அலை) يُونُس [4] [37] ? "யூனுஸின் மக்கள்"[38] ஒரு மாபெரும் மீன் விழுங்கியது.
21 துல்கிப்ல் (அலை) ذُو ٱلْكِفْل ? [39] ? தெரியவில்லை அடையாளம் இன்னும் தெரியவில்லை.
22 ஸக்கரியா (அலை) زَكَرِيَّا [4] ? ஜெருசலம் யஹ்யாவின் தந்தை; படுகொலை செய்யப்பட்டார்
23 யஹ்யா (அலை) يَحْيَىٰ [40] ? ஜெருசலம் படுகொலை செய்யப்பட்டார்
24 ஈஸா (அலை) عِيسَىٰ [41] [42] [7] [30] இன்ஜீல்[43] அண். 4 BCE – அண். 30 CE இஸ்ரவேலர்[44]
25 முஹம்மத் (ஸல்) مُحَمَّد [45][46] [47] [16] திருக்குர்ஆன்[48] 570 – 632 அனைத்து மனிதர்கள் மற்றும் ஜின்கள்[49] மேய்ப்பவர், வணிகர், இஸ்லாம் நிறுவனர்; நபிமார்களின் முத்திரை

ஸல்/அலை

[தொகு]

நபிமார்களின் பெயர்களை செவியுறும்பொழுது "ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்று கூறுவார்கள். அதற்கு பொருள், இறைவன் அவருக்கு அருளைப்பொழிவானாக.

முஹம்மத் என்ற பெயரையோ அல்லது நபி என்பதையோ எழுதும் போது பக்கத்தில் ஸல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதன் சுருக்கம். அல்லாஹ் அவருக்கு அருளும் ஈடேற்றமும் அளிப்பானாக என்பது இதன் பொருள்.

முகம்மது நபி அல்லாத ஏனைய பிற எல்லா நபிமார்களின் பெயர்களை எழுதும் போது அலை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அலை என்பது அலைஹிஸ் ஸலாம் அல்லது அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் என்பதன் சுருக்கம் இவருக்கு அருளும் சாந்தியும் ஏற்படட்டுமாக என்பது இதன் பொருள்.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "திருக்குர்ஆன் 2:31". tamilquran.org. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  2. "திருக்குர்ஆன் 4:1". tamilquran.org. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  3. "திருக்குர்ஆன் 19:56". tamilquran.org. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 "திருக்குர்ஆன் 6:89". tamilquran.org. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  5. "திருக்குர்ஆன் 26:107". tamilquran.org. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  6. திருக்குர்ஆன் 46:35 மற்றும் திருக்குர்ஆன் 33:7
  7. 7.0 7.1 7.2 7.3 திருக்குர்ஆன் 42:13
  8. திருக்குர்ஆன் 26:105
  9. 9.0 9.1 Quran 26:125
  10. "Hud (prophet)". www.mtholyoke.edu. Archived from the original on 2021-07-30. பார்க்கப்பட்ட நாள் 2022-03-26.
  11. Quran 7:65
  12. 12.0 12.1 Quran 26:143
  13. Quran 7:73
  14. Quran 19:41
  15. Quran 9:70
  16. 16.0 16.1 Quran 2:124
  17. Quran 87:19
  18. Quran 22:43
  19. Quran 6:86
  20. Quran 37:133
  21. Quran 7:80
  22. 22.0 22.1 Quran 19:54
  23. 23.0 23.1 Quran 19:49
  24. 24.0 24.1 Quran 4:89
  25. Quran 40:34
  26. Encyclopedia of Islam, A. Jefferey, Ayyub
  27. 27.0 27.1 Quran 26:178
  28. Quran 7:85
  29. 29.0 29.1 29.2 Quran 20:47
  30. 30.0 30.1 Quran 46:35 and Quran 33:7
  31. Quran 53:36
  32. Quran 43:46
  33. Quran 19:53
  34. Quran 17:55
  35. Quran 37:123
  36. Quran 37:124
  37. Quran 37:139
  38. Quran 10:98
  39. Quran 21:85-86
  40. Quran 3:39
  41. Quran 19:30
  42. Quran 4:171
  43. Quran 57:27
  44. Quran 61:6
  45. Page 50 "As early as Ibn Ishaq (85-151 AH) the biographer of Muhammad, the Muslims identified the Paraclete - referred to in John's ... "to give his followers another Paraclete that may be with them forever" is none other than Muhammad."
  46. Quran 33:40
  47. Quran 33:40
  48. Quran 42:7
  49. Quran 21:107
"https://ta.wikipedia.org/w/index.php?title=நபி&oldid=4124395" இலிருந்து மீள்விக்கப்பட்டது