சுசி
சுசி அல்லது சுஷி (Sushi; கன் எழுத்து:寿司) வினாகிரி இட்டு சமைக்கப்பட்ட சோற்றுடன் கடலுணவுகள் இறைச்சி, காய்கறி அல்லது முட்டை போன்றவற்றை நிரப்பிகளாகவோ மேல்படையாக இட்டோ தயாரிக்கப்படும் உணவாகும். இவ்வாறு மேல்-படையாக அல்லது நிரப்பிகளாக பயன்படுத்தப்படும் உணவு சமைக்கப்பட்டதாகவோ, சமைக்கப்படாததாகவோ உப்பூட்டபட்டவையாகவோ இருக்கலாம். எல்ல சுசி வகையிலும் சோறு கட்டாய அங்கமாகும்.[1][2][3]
தயாரிப்பு முறைகள்
[தொகு]சுசியின் வகை அது தயாரிக்கப்படும் முறையால் அல்லது பயன்படுத்தப்படும் மேல்-படை அல்லது நிரப்பிகள் போன்றவற்றால் வேறுபடுத்தப்படுகிறது. சுசி தயாரிக்கபடும் முறைகளைப் பிரதானமாக மூன்றாக பிரிக்கலாம்;
- மகிசுசி: நொரியில் (கடல் பாசியை மெல்லியதாக அழுத்தி உலரவைத்து செய்யப்படுவது) சோறு மற்றும் ஏதாவது நிரப்பிகள சுற்றப்பட்டு உருளை வடிவில் செய்யப்படுபவை. மக்கி நான்கு வகைப்படும்.
- ச்சூ மக்கி: மத்திம அளவாக உருட்டப்பட்ட மக்கி, ஒன்ற்கு மேற்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டிருக்கும்.
- ஃபூடொ மக்கி: தடிப்பாக உருட்டப்பட்ட மக்கி, ஒன்ற்கு மேற்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டிருக்கும்.
- ஒசோ மக்கி: மெல்லியதாக உருட்டப்பட்ட மக்கி, ஒரு மூலப்பொருளை மட்டுமே கொண்டிருக்கும்.
- டெமக்கி: கூம்பு வடிவிலான மக்கி சுசி
- நிகிரிசுசி: கையில் பிடிக்கப்படும் நீள் கோள வடிவான சோறு உருண்டைக்கு மேல்-படை ஒன்று இட்டு செய்யப்படும் சுசி
- குண்கன் மகிசுசி: நொரியால் செய்யப்பட்ட உருளைக்குள் அடியில் சோறு இட்டு மேல் பகுதியில் மீன் முட்டை இட்டு செய்யப்படும் சுசி
பயன்படுத்தப்படும் மேல்-படை அல்லது நிரப்பிகளைக் கொண்டு சுசி வகைப்படுத்தப்படும் போது அது சோறுடன் பயன்படுத்தப்படும் மற்றை மூலப்பொருளின் பெயரை கொள்ளும். இதன் படி பல சுசி வகைகள் காணப்படுகின்றது.
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sushi – How-To". FineCooking (in அமெரிக்க ஆங்கிலம்). 1998-05-01. Archived from the original on 2019-11-04. பார்க்கப்பட்ட நாள் 2019-11-04.
- ↑ "The Mysteries of Sushi – Part 2: Fast Food". Toyo Keizai. 23 May 2015. Archived from the original on 9 September 2017.
- ↑ "When Sushi Became a New Fast Food in Edo". Nippon.com. 22 December 2020. Archived from the original on 18 January 2021.