சால்ட் லேக் அரங்கம்
Appearance
சால்ட் லேக் அரங்கம் সল্ট লেক স্টেডিয়াম (Bengali) | |
---|---|
பேயர்ன் மியூனிக்கிற்கும் மோகன் பாகனுக்கும் இடையானயான ஆட்டத்தினபோது அரங்கம் | |
இடம் | பிதான்நகர், கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
திறவு | சனவரி 1984 |
உரிமையாளர் | இந்திய கால்பந்து சங்கம் |
தரை | அஸ்ட்ரோ டர்ஃப் |
முன்னாள் பெயர்(கள்) | யுவ பாரதி கிரிரங்கன் |
குத்தகை அணி(கள்) | மோகன் பாகான் (1984–நடப்பு) கிழக்கு வங்காளம் (1984–நடப்பு) பைய்லான் ஏரோஸ் (2011–நடப்பு) பிரயாக் யுனைட்டெட் விளையாட்டுக் கழகம் (1984–நடப்பு) |
அமரக்கூடிய பேர் | 120,000 |
பரப்பளவு | 105 × 68 மீட்டர்கள் |
சால்ட் லேக் அரங்கம் ( Salt Lake Stadium, வங்காள மொழியில் যুবভারতী ক্রীড়াঙ্গন, யுவ பாரதி க்ரீரங்கன்,தமிழ் மொழிபெயர்ப்பு:இந்திய இளைஞர்களுக்கான விளையாட்டரங்கம்), மேற்கு வங்காளத்தில் கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியான பிதான்நகரில் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு பல்பயன்பாட்டு அரங்கமாகும்.இந்தியாவில் உள்ள அரங்கங்களிலேயே மிகப் பெரியதும் உலகில் பார்வையாளர் அளவைப் பொறுத்தளவில் இரண்டாவதும் ஆன இந்த அரங்கம் 1984ஆம் ஆண்டு சனவரியில் திறக்கப்பட்டது.
அணுக்கம்
[தொகு]கிழக்கு பெருநகரப் புறவழிச்சாலையில் அமைந்துள்ள இந்த அரங்கத்திற்கு எளிதாக சாலை மூலம் சென்றடைய இயலும். கொல்கத்தா மெட்ரோவின் கிழக்கு-மேற்கு தாழ்வாரத்தில் இங்கு ஒரு மெட்ரோ தொடருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
காட்சிக்கூடம்
[தொகு]-
அரங்கத்தின் முதன்மை நுழைவாயில்