[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்பிரிக்க மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்பிரிக்க மொழிக் குடும்பங்களும் அதன் பேசப்படும் இடங்களும் காட்டும் நிலப்படம். ஆபிரிக்க-ஆசிய மொழிகள் வடக்கு ஆபிரிக்காவிலும் கிழக்கு ஆபிரிக்காவிலும் பேசப்படுகின்றன. நைகர்-கொங்கோ மொழிகளின் பாண்டு பிரிவை தனியாக காட்டும்.

ஆப்பிரிக்க மொழிகள் என்பது ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றிய மொழிகளை முதன்மையாகச் சுட்டும். இன்று 2000 மேற்பட்ட ஆப்பிரிக்க மொழிகள் வழக்கில் இருக்கின்றன. [1] பெருந்தொகையான மொழிகள் பல மக்கள் குழுக்களால் பேசப்படுவதால், எந்த ஒரு ஆப்பிரிக்க மொழியும் அதிக மக்கள் தொகையால் பேசப்படுவதில்லை. சுவாஹிலி மொழி, ஹவுசா மொழி, அம்ஹாரியம், ஒரொமோ, இக்போ, மலகாசி, யொரூபா ஆகிய மொழிகள் 15 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களால் பேசப்படுகின்றன.


அனேக ஆப்பிரிக்க மொழிகள் பிற்காலத்திலேயே எழுத்து வடிவம் பெற்றன. பெரும்பாலனவை விரிவான எழுத்து இலக்கிய வளம் அற்றவை.

காலனித்துவ ஆதிக்கதின் போது இங்கு வேரூன்றிய அரேபிய மொழி, ஆங்கிலம், பிரேஞ்சு, போர்க்கீச மொழி ஆகியவையே இன்று அரச அலுவல் மொழிகளாகவும், கல்வி, சமய, சட்ட, வணிக மொழிகளாகவும் செல்வாக்கு செலுத்துகின்றன.

முக்கிய ஆப்பிரிக்க மொழிகள்

[தொகு]

முக்கிய ஆபிரிக்க மொழிகளின் பட்டியல் (மில்லியன் அளவில் மொத்த பேசும் மக்களின் படி):

சுவாஹிலி மொழி (தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் கரையோரப் பகுதிகள்) 5-10 தாய்மொழி + 80 இரண்டாம் மொழி
ஹவுசா (மேற்கு ஆப்பிரிக்கா) 24 தாய்மொழி + 15 இரண்டாம் மொழி
அம்ஹாரியம் (வடகிழக்கு ஆப்பிரிக்கா) 35-42
ஒரொமோ (வடகிழக்கு ஆப்பிரிக்கா) 30-35
யொரூபா (மேற்கு ஆப்பிரிக்கா) 25
இக்போ (மேற்கு ஆப்பிரிக்கா) 25-35
சோமாலி (சோமாலியா) 15
பெர்பெர் மொழிகள் (வடக்கு ஆப்பிரிக்கா) 14-25
இக்போ மொழி (நைஜீரியா) 8-12
ஃபுலா (மேற்கு ஆப்பிரிக்கா) 10-16
மலகாசி (மடகாஸ்கர்) 17
ஆபிரிக்கானம் (தென்னாபிரிக்கா) 6-7 தாய்மொழி + 6-7 இரண்டாம் மொழி
சுலு மொழி (தென்னாபிரிக்கா) 10
சிச்செவா (தென்கிழக்கு ஆபிரிக்கா) 9
அக்கான் 9
ஷோனா 7
இச்சோசா மொழி (தென்னாபிரிக்கா) 8
கின்யருவாண்டா (ருவாண்டா) 7
கொங்கோ 7
டிக்ரின்யா 7
சிலூபா (கொங்கோ) 6
வொலோஃப் 3 தாய்மொழி + 3 இரண்டாம் மொழி
கிகுயு (கென்யா) 5
மொரே (மேற்கு ஆபிரிக்கா) 5
கிருண்டி (புருண்டி) 5
சோத்தோ (தென்னாபிரிக்கா, லெசோத்தோ) 5
லுஹ்யா 4
துசுவானா (பொட்சுவானா) 4
கனூரி (மேற்கு ஆபிரிக்கா) 4
உம்புன்டு (அங்கோலா) 4
வடக்கு சோத்தோ (தென்னாபிரிக்கா) 4

மேற்கோள்கள்

[தொகு]
  1. Major Languages of Africa
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்பிரிக்க_மொழிகள்&oldid=3097714" இலிருந்து மீள்விக்கப்பட்டது