[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

அறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சப்பானில் உள்ள இளைஞர் விடுதியில் உள்ள ஒரு அறை.
ஒரு வாழ் அறை

ஒரு அறை (ஒலிப்பு) என்பது, ஒரு கட்டிடத்தினுள் தனியாகப் பிரித்தறியக்கூடிய ஒரு இடம் அல்லது வெளி ஆகும். வழமையாக ஒரு அறை பிற அறைகள், வெளிகள் அல்லது நடைவழி போன்றவற்றில் இருந்து உள்ளகச் சுவர்களினாலும், வெளியிடங்களில் இருந்து வெளிப்புறச் சுவர்களினாலும் பிரிக்கப்பட்டிருக்கும். சில அறைகள், பயன்பாடுகளுக்கு உரியவையாகவும், வேறு சில சிறப்புப் பயன்பாடுகளுக்கு உரியனவாகவும் இருக்கக்கூடும். கிறித்துவுக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டிடங்கள் அறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததற்கான சான்றுகள் உள்ளன.[1][2]

வரலாற்றில் அறை வகைகள்

[தொகு]

தொடக்ககாலக் கட்டிடங்களில், குறிப்பாக வாழிடக் கட்டிடங்களில் படுக்கையறைகள், சமையலறைகள், குளியலறைகள், வரவேற்பறைகள், வேறும் பிற சிறப்புப் பயன்பாடுகளுக்கான அறைகளை அடையாளம் காணமுடியும். மினோவன் பண்பாட்டைச் சேர்ந்த அக்குரோத்திரியில் இடம்பெற்ற அகழ்வாய்வுகள், படிக்கட்டுகள் பொருத்தப்பட்டு ஒன்றன்மீது ஒன்றாக அமைந்த அறைகள் இருந்ததைக் காட்டுகின்றன. குளிர்நீர், சுடுநீர் ஆகியவற்றின் விநியோகத்துக்காக வெண்களிமத்தினால் செய்யப்பட்ட குளாய்கள் பொருத்தப்பட்ட கழுவு கிண்ணங்கள், குளியல் தொட்டிகள் என்பவற்றோடு கூடிய குளியலறைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[1]

எனினும், சாதாரண மக்களின் பயன்பாட்டுக்கான பழையகாலக் கட்டிடங்களில் அறைகள் பெரும்பாலும் பல்பயன்பாட்டுக்கானவை. நாகரிக வளர்ச்சி காரணமாக கட்டிடங்களின் பயன்பாட்டுச் சிக்கல்தன்மை அதிகரித்தபோது, சிறப்புப் பயன்பாடுகளுக்கான அறைகளின் தேவையும் அதிகரித்தது எனலாம். தற்காலத்தில், தொழில்நுட்ப மேம்பாட்டினால், பல துறைகளிலும் புதிய வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. மருத்துவத்துறை, கல்வித்துறை, தொழிற்றுறை, விருந்தோம்பற்றுறை போன்ற பல்வேறு துறைகளுக்கான கட்டிடங்களில், புதிய சாதனங்களுக்கும், வசதிகளுக்கும் இடமளிப்பதற்காகச் சிறப்பு அறைகள் தேவைப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Archaeological Site of Akrotiri". Travel to Santorini: Santorini Island Guide. Marinet Ltd. பார்க்கப்பட்ட நாள் 23 November 2009.
  2. Oxford Dictionaries (2013)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறை&oldid=3924254" இலிருந்து மீள்விக்கப்பட்டது