அந்திக்கிறிஸ்து
கிறிஸ்தவம் கூறும் இறுதி நாட்களில் அந்திகிறிஸ்து தோன்றி விவிலியம் தீர்க்கதர்சனம் கூறப்பட்ட மக்களை இயேசு கிறிஸ்துவை எதிர்க்கத் தூண்டுவான். மேலும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன் இயேசுவின் இடத்தில் அஸ்திகிறிஸ்து தம்மைப் பிரகடனம் செய்து கொள்வான்.[1] அந்திகிறிஸ்து எனும் சொல் பன்மை வடிவம் ஆகும்.[2] மேலும் இச்சொல் புதிய ஏற்பாட்டில் நான்கு முறை வருகிறது. இயேசுவின் சீடர் யோவான் நற்செய்தியின் முதல் மற்றும் இரண்டாம் நிருபத்தில் அந்திகிறிந்து எனும் சொல் காணப்படுகிறது. "தந்தையையும் மகனையும் மறுப்பவர்" என்று அந்திகிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்.
"பொய் கிறிஸ்து" என்ற சொல்லும் நற்செய்திகளில் காணப்படுகிறது.[3]மத்தேயு நற்செய்தியில் (அத்தியாயம் 24) மற்றும் மாற்கு நற்செய்தியில் (அத்தியாயம் 13)இல் "பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும்" செய்து, தங்களைக் கிறிஸ்து என்று கூறிக்கொள்ளும் பொய்யான தீர்க்கதரிசிகளால் ஏமாற்றப்பட வேண்டாம் என்று இயேசு தம் சீடர்களை எச்சரிக்கிறார்.[4][5][6] தெசலோனிக்கேயர்களுக்கு பவுல் எழுதிய இரண்டாவது கடிதத்தில் "பாவத்தின் மனிதன்" மற்றும் வெளிப்படுத்தல் புத்தகத்தில் உள்ள கடல் மிருகம் பெரும்பாலும் அந்திகிறிஸ்துவுடன் தொடர்புடையது.[7][8][9]
சொற்பிறப்பியல்
[தொகு]அந்திகிறிஸ்து என்பது இரண்டு பண்டைய கிரேக்கச் சொற்களான ἀντί + Χριστός (anti + Christos) ஆகியவற்றின் கலவையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கிரேக்க மொழியில் Χριστός என்பது "அபிஷேகம் செய்யப்பட்டவர்" என்று பொருள்படும் மற்றும் கிறிஸ்து என்ற வார்த்தை அதிலிருந்து வந்தது. "Ἀντί" என்பது "எதிராக" மற்றும் "எதிர்" என்ற பொருளில் மட்டுமல்ல, "இடத்தில்" என்றும் பொருள்படும்.[10]
புதிய ஏற்பாடு
[தொகு]புதிய ஏற்பாட்டில் ஒரு தனிப்பட்ட அந்திகிறிஸ்து இருக்கிறாரா என்பது சர்ச்சைக்குரியது. அந்திகிறிந்து என்ற கிரேக்க சொல், யோவான் நற்செய்தியில் முதலில் கூறப்பட்டுள்ளது.[11] இதேபோன்ற சொல்லான பொய் கிறிஸ்து ("தவறான மேசியா") புதிய ஏற்பாட்டில் முதன்முதலில் காணப்படுகிறது. கிமு. 500-கிபி 50 காலகட்டத்தில் யூத எழுத்துக்களில் அந்திகிறிஸ்து என்ற கருத்து காணப்படவில்லை.[12] ரோமானிய ஆட்சிக்கு உட்பட்ட யூதர்களின் விரக்தியால் இந்த கருத்து உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று பெர்னார்ட் மெக்கின் யூகிக்கிறார்.
ஜோஹனின் இலக்கியங்களில் "அந்திகிறிஸ்து" அல்லது "கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள்" என்ற சொல்லின் பயன்பாட்டை தெளிவாக்கவில்லை. "ஏமாற்றுபவர்" அல்லது "அந்திகிறிஸ்து" சொற்கள் தனி நபரைக் காட்டிலும் ஒரு குறிப்பிட்ட வகை நபர்களைக் குறிப்பதாகக் காணப்படுகிறது.[13]
— 1 ஜான் நற்ச்செய்தி: 2:18 இயேசு கிறிஸ்து என்று மறுப்பவனைத் தவிர யார் பொய்யர்? இவர்தான் அந்திக்கிறிஸ்து, பிதாவையும், குமாரனையும் மறுதலிப்பவர்.
— 1 ஜான்- 2:22 நீங்கள் கடவுளின் ஆவியை அறிவீர்கள்: இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வந்தார் என்று ஒப்புக்கொள்ளும் ஒவ்வொரு ஆவியும் கடவுளிடமிருந்து வந்தது. இயேசுவை அறிக்கை செய்யாத ஒவ்வொரு ஆவியும் கடவுளிடமிருந்து வந்ததல்ல. இது அந்திக்கிறிஸ்துவின் ஆவி, வரப்போகிறது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; இப்போது அது ஏற்கனவே உலகில் உள்ளது.
— 1 ஜான்- 4:2–3 இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வந்ததை ஒப்புக்கொள்ளாத பல ஏமாற்றுக்காரர்கள் கிறிஸ்துவுக்கு எதிரானவன்!
— 2 ஜான் 1:7 அந்திகிறிஸ்து உருவத்தின் கவனம், தெசலோனிக்காரர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இந்த பத்தியில் "அந்தி கிறிஸ்து" என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை:
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இரண்டாம் வருகையும், அவரிடத்தில் நாம் கூடிவருவதையும் குறித்து, வார்த்தையாலும், கடிதத்தினாலோ, எங்களிடமிருந்து வந்ததைப் போல, மனதை விரைவில் அசைக்கவோ, பதற்றமடையவோ வேண்டாம் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். கர்த்தருடைய நாள் ஏற்கனவே வந்துவிட்டது. யாரும் உங்களை எந்த வகையிலும் ஏமாற்ற வேண்டாம்; ஏனென்றால், கலகம் முதலில் வந்து, அக்கிரமக்காரன், அழிவுக்குரியவன் வெளிப்பட்டாலொழிய அந்த நாள் வராது. அவர் கடவுள் என்று அழைக்கப்படும் அல்லது வழிபாட்டுக்குரிய ஒவ்வொரு பொருளுக்கும் மேலாகத் தன்னை உயர்த்திக் கொள்கிறார். அதனால் அவர் கடவுளின் கோவிலில் இருக்கையில் அமர்ந்து, தன்னை கடவுள் என்று அறிவித்தார்.
— 2 தெசலோனிக்கேயர் 2:1–4 ஏனென்றால் அக்கிரமத்தின் மர்மம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. ஆனால் இப்போது அதைக் கட்டுப்படுத்துபவர் அகற்றப்படும் வரை மட்டுமே. அப்பொழுது அக்கிரமக்காரன் வெளிப்படுவான், கர்த்தராகிய இயேசு தம்முடைய வாயின் சுவாசத்தினால் அழித்து, தம் வருகையின் வெளிப்பாட்டினால் அவனை நிர்மூலமாக்குவார். அவர்கள் சத்தியத்தை விரும்பி இரட்சிக்க மறுத்ததால், அழிந்து வருபவர்களுக்காக எல்லா சக்தியையும், அடையாளங்களையும், பொய் அதிசயங்களையும், எல்லா வகையான பொல்லாத வஞ்சகங்களையும் பயன்படுத்தும் சாத்தானின் செயல்பாட்டில் அக்கிரமக்காரனின் வருகை தெளிவாகத் தெரிகிறது.
— 2 தெசலோனிக்கேயர் 2:7–10 அந்தி கிறிஸ்து என்ற வார்த்தை யோவான் நற்செய்திகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டாலும், இதே சொல்லான "பொய் கிறிஸ்து" (கிரேக்க சூடோக்ரிஸ்டோஸ், அதாவது "தவறான மேசியா") இயேசுவின் நற்செய்திகளில் உள்ளது.
ஏனென்றால் பொய்யான மேசியாக்களும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் தோன்றி, பெரிய அடையாளங்களையும் சகுனங்களையும் தோற்றுவிப்பார்கள், முடிந்தால் கூட வழிதவறச் செய்வார்கள்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Antichrist". Brill Encyclopedia of Early Christianity Online. (2018). DOI:10.1163/2589-7993_EECO_SIM_00000194.
- ↑ 1 John John&verse=2:18–22&src=NRSV 2:18–22; John&verse=4:1–6&src=NRSV 4:1–6. 2 John John&verse=1:7–11&src=NRSV 1:7–11.
- ↑ Strong, James (1890). "G5580 – pseudochristos". Strong's Concordance. Blue Letter Bible. பார்க்கப்பட்ட நாள் 27 December 2021.
ψευδόχριστος pseudóchristos, psyoo-dokh'-ris-tos; [...] a spurious Messiah:—false Christ. ψευδόχριστος, ψευδοχριστου, ὁ (ψευδής and χριστός), a false Christ (or Messiah) (one who falsely lays claim to the name and office of the Messiah): Matthew 24:24; Mark 13:22.
- ↑ Aune, David E. (1983). "The Prophecies of Jesus: Unmasking False Prophets". Prophecy in Early Christianity and the Ancient Mediterranean World. Grand Rapids, Michigan: Wm. B. Eerdmans. pp. 222–229. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8028-0635-2. இணையக் கணினி நூலக மைய எண் 9555379.
- ↑ Chae, Young S. (2006). "Matthew 7:15: False Prophets in Sheep's Clothing". Jesus as the Eschatological Davidic Shepherd: Studies in the Old Testament, Second Temple Judaism, and in the Gospel of Matthew. Wissenschaftliche Untersuchungen zum Neuen Testament 2. Reihe. Vol. 216. Tübingen: Mohr Siebeck. pp. 234–236. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-16-148876-4. பன்னாட்டுத் தர தொடர் எண் 0340-9570.
- ↑ France, Richard T. (2007). "Scene 2: False Prophets". The Gospel of Matthew. Grand Rapids, Michigan and Cambridge, U.K.: Wm. B. Eerdmans. pp. 289–291. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8028-2501-8. LCCN 2007013488.
- ↑ Lietaert Peerbolte, Bert Jan (2013). "How Antichrist Defeated Death: The Development of Christian Apocalyptic Eschatology in the Early Church". In Krans, Jan; Lietaert Peerbolte, L. J.; Smit, Peter-Ben; Zwiep, Arie W. (eds.). Paul, John, and Apocalyptic Eschatology: Studies in Honour of Martinus C. de Boer. Novum Testamentum: Supplements. Vol. 149. Leiden: Brill Publishers. pp. 238–255. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1163/9789004250369_016. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-25026-0. பன்னாட்டுத் தர தொடர் எண் 0167-9732. S2CID 191738355.
- ↑ Rowland, Christopher (2010) [2007]. "Part I: Historical Eschatology – The Eschatology of the New Testament Church". In Walls, Jerry L. (ed.). The Oxford Handbook of Eschatology. Oxford and New York: Oxford University Press. pp. 56–73. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/oxfordhb/9780195170498.001.0001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195170498. LCCN 2006032576. S2CID 171574084.
- ↑ Chrysostom, John. "Homily 4 on Second Thessalonians". Translated by John A. Broadus. From Nicene and Post-Nicene Fathers, First Series, Vol. 13. Edited by Philip Schaff. (Buffalo, NY: Christian Literature Publishing Co., 1889.) Revised and edited for New Advent by Kevin Knight.
- ↑ See Strong's Bible Dictionary:χριστος பரணிடப்பட்டது சூலை 11, 2012 at Archive.today
- ↑ Horbury, William (2003). Messianism Among Jews and Christians: Biblical and Historical Studies. London: A&C Black. p. 333. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0567088086.
Against this background it can be seen that the technical Greek term antichristos, although it is known only from Christian … Antichristos first occurs in the Johannine epistles, and it is not used by other Greek Jewish or early Christian writings ...
- ↑ Mauser, Ulrich (1992). The Gospel of Peace: A Scriptural Message for Today's World. p. 70.
From Josephus's writings we collect, first of all, without much critical comment, some statements showing the close affinity of the … nowhere in his extensive accounts of the Jewish–Roman war uses the word "pseudo-Christ" (pseudochristos).
- ↑ Yarbrough, Robert (2008). 1–3 John. Ada, Michigan: Baker Academic. p. 344. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0801026874.
The articles in front of "deceiver" (ὁ πλάνος, ho planos) and "antichrist" (ὁ ἀντίχριστος, ho antikhristos) should be seen as marking out a certain category of persons (Wallace 1996: 227–230). This is a common Johannine usage (1 John 2:23)
ஊசாத்துணை
[தொகு]- Berry, Rev. Elwood (1921). . The Apocalypse of St. John. The Catholic Church Supply House.
- Froom, Le Roy Edwin (1948). Pre-Reformation and Reformation Restoration, and Second Departure (PDF). The Prophetic Faith of our Fathers: The Historical Development of Prophetic Interpretation. Vol. 2. Washington, DC: The Review and Herald Publishing Association.
- Robert, Yarbrough (2008). 1–3 John. Baker Academic. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0801026874.
- Maas, Anthony John (1907). "Antichrist". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்) 1. நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- Lietaert Peerbolte, L.J. (1966). The Antecedents of Antichrist: A Traditio-Historical Study of the Earliest Christian Views on Eschatological Opponents. Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004104550.
- Foxe, John (1583). The Acts and Monuments, Book II. R.B. Seeley and W. Burnside, sold by L. & G. Seeley. p. 121. பார்க்கப்பட்ட நாள் June 6, 2010.
- Jerome (1893) [347–420]. "Letter to Pope Damasus". In Schaff, Philip (ed.). A Select Library of Nicene and Post-Nicene Fathers of the Christian Church. 2nd series. Vol. VI. Henry Wace. New York: The Christian Literature Company. p. 19. பார்க்கப்பட்ட நாள் June 7, 2010.
- Jerome (1893b) [347–420]. "The Dialogue against the Luciferians". In Schaff, Philip (ed.). A Select Library of Nicene and Post-Nicene Fathers of the Christian Church. 2nd series. Vol. VI. Henry Wace. New York: The Christian Literature Company. p. 334. பார்க்கப்பட்ட நாள் June 7, 2010.
- Jerome (1893c) [347–420]. "Against the Pelagians, Book I". In Schaff, Philip (ed.). A Select Library of Nicene and Post-Nicene Fathers of the Christian Church. 2nd series. Vol. VI. Henry Wace. New York: The Christian Literature Company. p. 449. பார்க்கப்பட்ட நாள் June 7, 2010.
- Jerome (1893d) [347–420]. "Letter to Ageruchia". In Schaff, Philip (ed.). A Select Library of Nicene and Post-Nicene Fathers of the Christian Church. 2nd series. Vol. VI. Henry Wace. New York: The Christian Literature Company. pp. 236–237. பார்க்கப்பட்ட நாள் June 8, 2010.
- Jerome (1958) [347–420]. Archer, Gleason L. (ed.). Jerome's Commentary of Daniel (Translation). Grand Rapids, Michigan: Baker Book House. Archived from the original on May 26, 2010. பார்க்கப்பட்ட நாள் June 7, 2010.
- McGinn, Bernard (1994). Antichrist: Two Thousand Years of the Human Fascination With Evil. New York: HarperCollins.
- Cabinet, Kristofer Widholm and Bernard McGinn (2001). "Antichrist: An Interview with Bernard McGinn". Cabinet Magazine. Issue 5 Evil Winter (Cabinet Magazine). http://www.cabinetmagazine.org/issues/5/widholm.php. பார்த்த நாள்: October 27, 2010.
- Origen (1872) [185–254]. "Writings of Origen, vol 2". In Roberts, Rev. Alexander (ed.). Ante-Nicene Christian Library [Writings of the Fathers]. Vol. XXIII. James Donaldson. Edinburgh: T&T Clark. pp. 385–388. பார்க்கப்பட்ட நாள் June 6, 2010.
- Schaff, Philip; Schley Schaff, David (1885). History of the Christian Church. Charles Scribner's Sons. பார்க்கப்பட்ட நாள் January 18, 2009.
- Cohn, Norman (1970). The Pursuit of the Millennium (Rev. and expanded. ed.). New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195004564.
Norman Cohn.
- Schneemelcher, Wilhelm; Wilson, Robert McLachlan (trans.) (2003). New Testament Apocrypha: Writings relating to the Apostles; Apocalypses and related subjects, Vol. 2 (sixth German edition 1989, 1992, 2003 ed.). [S.l.]: Westminster John Knox. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0664227227.
வெளி இணைப்புகள்
[தொகு]- Of Antichrist and His Ruin (1692) by John Bunyan. Online as part of the Acacia John Bunyan Online Library.
- Lerner, Robert E. (March 22, 2007). "Antichrist". Encyclopædia Britannica (online).
- Kevin Knight (ed.). "Against Heresies: Book V: Chapter 25". Ante-Nicene Fathers, Vol. 1. Translated by Alexander Roberts; William Rambaut. Buffalo, NY: New Advent.
- Ginzberg, Louis (1901–1906). "Antichrist". Jewish Encyclopedia.
- Lutheran Scholarly Works on the Antichrist
- OrthodoxWiki: Antichrist