68
Appearance
நூற்றாண்டுகள்: | கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 30கள் 40கள் 50கள் - 60கள் - 70கள் 80கள் 90கள்
|
ஆண்டுகள்: | 65 66 67 - 68 - 69 70 71 |
68 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 68 LXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 99 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 821 |
அர்மீனிய நாட்காட்டி | N/A |
சீன நாட்காட்டி | 2764-2765 |
எபிரேய நாட்காட்டி | 3827-3828 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
123-124 -10--9 3169-3170 |
இரானிய நாட்காட்டி | -554--553 |
இசுலாமிய நாட்காட்டி | 571 BH – 570 BH |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 318 |
யூலியன் நாட்காட்டி | 68 LXVIII |
கொரிய நாட்காட்டி | 2401 |
ஆண்டு 68 (LXVIII) என்பது யூலியன் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் துவங்கிய நெட்டாண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "சிலியசு இத்தாலிக்கசு, திரக்காலசு தூதர்களின் ஆண்டு" (Year of the Consulship of Caesar and Paullus) எனவும், நான்கு பேரரசர்களின் ஆண்டு எனவும் "ஆண்டு 821" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. இவ்வாண்டு நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 68 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.[1]
நிகழ்வுகள்
[தொகு]உரோமைப் பேரரசு
[தொகு]- லூசியசு குளோடியசு மேசர் என்பவன் நீரோ மன்னனுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டான்
- நீரோவை செனட் அவை வேண்டாதவராக அறிவித்தது.
- சூன் 9 – பேரரசர் நீரோ உரோமில் இருந்து நான்கு மைல் தொலைவில் தற்கொலை செய்து கொண்டார். பிரடோரியன் காவலர்களால் நிராதரவாக்கப்பட்டதை அடுத்து நீரோ தொண்டையில் குத்தி இறந்தார்.
- சூன் 9 – உரோமையின் செனட் கால்பாவை உரோமைப் பேரரசராக அறிவித்தது.
- திராயானின் தந்தை மார்க்கசு உல்ப்பியசு திரயானுசு தூதராக நியமிக்கப்பட்டார்.
- திராயான் இசுக்கைதபோலிசு சென்று யோர்தான் ஆற்றைக் கடந்தார். எரிக்கோவை முற்றுகையிட்டு சாக்கடல் சுருள் ஏடுகள் தோன்றிய கும்ரான் மடாலயத்தை அழித்தார்.
ஆசியா
[தொகு]- தென்கிழக்காசியாவின் முதல் அறியப்பட்ட நாகரீகமான இன்றைய கம்போடியா, தெற்கு வியட்நாம், தெற்கு தாய்லாந்து, கிழக்கு தாய்லாந்து ஆகியவற்றை உள்ளடக்கிய மீகாங் டெல்டாவில் பூனான் இராச்சியம் நிறுவப்பட்டது. இதன் தலைநகரம் கம்போடியாவில் உள்ள வியாதபுரா அல்லது இன்றைய பா பும் மாவட்டம் ஆகும்.
சமயம்
[தொகு]- பௌத்தம் அதிகாரபூர்வமாக சீனாவை அடைந்தது.
- அந்தியோக்கு இஞ்ஞாசியார் அந்தியோக்கியாவின் மூன்றாவது ஆயரானார்.
- மாற்கு நற்செய்தி எழுதப்பட்டது.
- சாக்கடல் சுருள் ஏடுகள் கும்ரானின் குகைகளில் வைக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Nero | Biography, Claudius, Rome, Burning, Fate, Accomplishments, & Facts | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 December 2022.