1815
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1815 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1815 MDCCCXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1846 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2568 |
அர்மீனிய நாட்காட்டி | 1264 ԹՎ ՌՄԿԴ |
சீன நாட்காட்டி | 4511-4512 |
எபிரேய நாட்காட்டி | 5574-5575 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1870-1871 1737-1738 4916-4917 |
இரானிய நாட்காட்டி | 1193-1194 |
இசுலாமிய நாட்காட்டி | 1230 – 1231 |
சப்பானிய நாட்காட்டி | Bunka 12 (文化12年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2065 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4148 |
ஆண்டு 1815 (MDCCCXV) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 3 - ஆஸ்திரியா, பிரித்தானியா, மற்றும் பிரான்ஸ் ஆகியன புரூசியா]]வுக்கும் ரஷ்யாவுக்கும் எதிராக இரகாசியா பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
- ஜனவரி 8 - அண்ட்ரூ ஜாக்சன் தலைமையில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் லூசியானாவின் நியூ ஓர்லீன்சில் பிரித்தானியரைத் தோற்கடித்தனர்.
- பெப்ரவரி 10 - கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.
- பெப்ரவரி 26 - நெப்போலியன் பொனபார்ட் எல்பாவிலிருந்து தப்பினான்.
- மார்ச் 1 - இத்தாலியின் தீவான எல்பாவுக்கு நாடு கடத்தப்பட்ட நெப்போலியன் பொனபார்ட் பிரான்ஸ் திரும்பினான்.
- மார்ச் 2 - கண்டி ஒப்பந்தம் என வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி இராச்சியம் பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. பிடிபட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டான்.
- மார்ச் 15 - நேப்பில்ஸ் மன்னன் ஜோக்கிம் முராட் ஆஸ்திரியா மீது போர் தொடுத்தான்.
- மார்ச் 20 - எல்பாவிலிருந்து தப்பிய நெப்போலியன் ஆயிரக்கணக்கான பாடைவீரர்களைத் திரட்டிக்கொண்டு பாரிஸ் வந்து "நூறு நாட்கள்" ஆட்சி செய்தான்.
- ஏப்ரல் 5-ஏப்ரல் 12 - இந்தோனீசியாவின் டம்போரா மலை தீக்கக்கியதில் 92,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 15 - சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகமானது.
- மே 3 - நேப்பில்சின் படைகளை ஆஸ்திரியா தோற்கடித்தது.
- மே 30 - இலங்கையிலிருந்து காயப்பட்ட போர்வீரர்களை ஏற்றி வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆர்னிஸ்டன் என்ற கப்பல் தென்னாபிரிக்காவுக்கு அருகில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 378 பேரில் 372 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 18 - நெப்போலியன் பொனபார்ட் வாட்டர்லூ என்னுமிடத்தில் இடம்பெற்ற சமரில் தனது இறுதித் தோல்வியைச் சந்தித்தான்.
- ஜூன் 22 - நெப்போலியன் மீண்டும் பதவியிழந்தான். 4 வயதான இரண்டாம் நெப்போலியன் ஜூன் 22 முதல் ஜூலை 7 வரை இரண்டு வாரங்களுக்கு ஆட்சியில் இருந்தான்.
- ஜூலை 8 - பதினெட்டாம் லூயி பாரிஸ் திரும்பி பிரான்சின் மன்னனான்.
- ஜூலை 17 - பிரான்சில் நெப்போலியன் பொனபார்ட் பிரித்தானியர்களிடம் சரணடைந்தான்.
- ஆகஸ்ட் - இலங்கைக்கு செல்வதற்காக அமெரிக்க மதப் பரப்பாளர்கள் குழு ஒன்று பொஸ்டனை விட்டுப் புறப்பட்டது.
- அக்டோபர் 15 - பிரான்சின் முதலாம் நெப்போலியன் சென் ஹெலெனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
- டீசம்பர் 7 - நெப்போலியனுக்கு ஆதரவாக இருந்த பிரெஞ்சுத் தளபதி மிக்கேல் நேய் என்பவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
நாள் அறியப்படாதவை
[தொகு]- பிரித்தானியாவின் மதப் பரப்பாளர்கள் நியூசிலாந்து வந்தனர்.
- முதற் தர துடுப்பாட்டப் போட்டிகள் ஆரம்பமாயின.
பிறப்புக்கள்
[தொகு]- ஏப்ரல் 6 - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (இ. 1876
- நவம்பர் 2 - ஜார்ஜ் பூல், இங்கிலாந்தைச் சேர்ந்த கணிதவியலாளர்
இறப்புக்கள்
[தொகு]நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Judith Bailey Slagle, ed. (1999). The Collected Letters of Joanna Baillie. Fairleigh Dickinson University Press. p. 734. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780838638163.
- ↑ Price, Munro. Napoleon: The End of Glory. Oxford University Press, 2014.
- ↑ Longford, Elizabeth (1986). "194". In Hastings, Max (ed.). The Oxford Book of Military Anecdotes. Oxford University Press. pp. 230–234. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195205282.