1874
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1874 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1874 MDCCCLXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1905 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2627 |
அர்மீனிய நாட்காட்டி | 1323 ԹՎ ՌՅԻԳ |
சீன நாட்காட்டி | 4570-4571 |
எபிரேய நாட்காட்டி | 5633-5634 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1929-1930 1796-1797 4975-4976 |
இரானிய நாட்காட்டி | 1252-1253 |
இசுலாமிய நாட்காட்டி | 1290 – 1291 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 7 (明治7年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2124 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4207 |
1874 (MDCCCLXXIV) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 23 - விக்டோரியா மகாராணியின் மகன் எடின்பரோ கோமகன் அல்பிரட் ரஷ்யாவின் மூன்றாம் அலெக்சாண்டரின் ஒரே மகளான மரீயா அலெக்சாந்திரொவ்னாவை திருமணம் புரிந்தார்.
- மார்ச் 18 - வணிக உரிமைகளை வழங்கும் உடன்பாட்டில் ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் கையெழுத்திட்டது.
- மே 9 - குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- மே 20 - லெவீ ஸ்ட்ரவுஸ் மற்றும் ஜேக்கப் டேவிஸ் ஆகியோர் நீல ஜீன்சிற்கான ஐக்கிய அமெரிக்க காப்புரிமத்தைப் பெற்றனர்.
- ஜூலை 1 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மிருகக் காட்சிச் சாலை பிலடெல்பியாவில் ஆரம்பிக்கப்பட்டது.
- ஜூலை 23 - இலங்கையின் சட்டசபையின் தமிழ்ப் பிரதிநிதி முத்து குமாரசுவாமி இங்கிலாந்தில் சேர் பட்டம் அளித்துக் கௌரவிக்கப்பட்டார்.
- ஜூலை 24 - மத்தியூ எவன்ஸ், ஹென்றி வூட்வேர்ட் ஆகியோர் முதலாவது வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றனர்.
- டிசம்பர் 9 - வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வது அவதானிக்கப்பட்டது.
தேதி அறியப்படாதவை
[தொகு]- அயர்லாந்தில் ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சிக்கெதிராக சுயாட்சி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
- அக்ரா கால்வாய் இந்தியாவில் அமைக்கப்பட்டது.
- பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- மார்ச் 26 - றொபேட் ஃபுறொஸ்ட் அமெரிக்கக் கவிஞர் (இ. 1963)
- ஜூலை 31 - செய்குத்தம்பி பாவலர், தமிழறிஞர் (இ. 1950)
- ஏப்ரல் 25 - மார்க்கோனி, வானொலியைக் கண்டு பிடித்தவர் (இ. 1937)
- நவம்பர் 30 - வின்ஸ்டன் சேர்ச்சில், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1965)
இறப்புகள்
[தொகு]- சனவரி 23 - இராமலிங்க அடிகள், சன்மார்க்க சிந்தானையாளர் (பி. 1823)