1480
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1480 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1480 MCDLXXX |
திருவள்ளுவர் ஆண்டு | 1511 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2233 |
அர்மீனிய நாட்காட்டி | 929 ԹՎ ՋԻԹ |
சீன நாட்காட்டி | 4176-4177 |
எபிரேய நாட்காட்டி | 5239-5240 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1535-1536 1402-1403 4581-4582 |
இரானிய நாட்காட்டி | 858-859 |
இசுலாமிய நாட்காட்டி | 884 – 885 |
சப்பானிய நாட்காட்டி | Bunmei 12 (文明12年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1730 |
யூலியன் நாட்காட்டி | 1480 MCDLXXX |
கொரிய நாட்காட்டி | 3813 |
1480 (MCDLXXX) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமை ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 6 – டொலெடோ உடன்பாடு: எசுப்பானியாவின் பெர்டினண்டும், இசபெல்லாவும் போர்த்துக்கீச அபொன்சோ கைப்பற்றிய ஆப்பிரிக்கப் பகுதிகளை அங்கீகரித்தனர். பதிலாக கேனரி தீவுகள் எசுப்பானியாவுக்குக் கொடுக்கப்பட்டது.
- சூலை 28 – இரண்டாம் முகமது ரோட்சைக் கைப்பற்றும் முயற்சியில் தோல்வியடைந்தான்.
- சூலை 28 – உதுமானிய இராணுவம் இத்தாலியின் ஒத்திராந்தோவை வந்தடைந்தது. அவர்களை விரட்ட திருத்தந்தை நான்காம் சிக்சுடசு சிலுவைப் போரை அறிவித்தார்.
- ஆகத்து 14 – இத்தாலியின் தெற்கே ஒத்ராந்தோ நகரில் இசுலாமுக்கு மதம் மாற மறுத்த 800 கிறித்தவர்கள் உதுமானியர்களால் கழுத்து துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்த ஒத்ராந்தோ மறைசாட்சிகள் 2013-இல் திருச்சபையினால் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.
- செப்டம்பர் 27 – பெர்டினண்டும் முதலாம் இசபெல்லாவும் எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணையை ஆரம்பித்தனர்.
- அக்டோபர் – உக்ரா ஆற்றில் பெரிய நிலைப்பாடு: தங்க நாடோடிக் கூட்டத்திலிருந்து மாஸ்கோவில் சுதந்திரமாகச் செயல்பட ஆரம்பித்தது. விளாதிமிரின் தியோதோகோசின் திருவோவியம் மாஸ்கோவைக் காப்பாற்றியதாக நம்பப்பட்டது.
- அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கத்தின் கடைசி எச்சங்களும் காணாமல் போயின.
- இலங்கையில் ஏழாம் பராக்கிரமபாகுவின் ஆட்சி.
பிறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 27 – பெர்டினென்ட் மகலன், போர்த்துக்கீச மாலுமி, நாடுகாண் பயணி (இ. 1521)