[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ட்ரோமப்டேலுங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ட்ரோமப்டேலுங்

சேவையில் 1920–1945
நாடு ஜெர்மனி
வகை ஊர்க்காவல்
அளவு 30 இலட்சம் (1934)
வேறு பெயர் காவிச்சட்டையர் (Brown Shirts)
தளபதிகள்
குறிப்பிடத்தக்க
தளபதிகள்
[1][2][3]

எமில் மவுரிஸ் (1920–1921)
ஜேன்ஸ் உல்ரிக் கிளின்ட்ஸ் (1921–1923)
எர்மன் கோரிங் (1923)
யாரும் நியமிக்கப்படவில்லை (1923–1925)
பிரான்ஸ் பெபர் வோன் சாலமன் (1926–1930)
அடால்ப் இட்லர் (1930–1945)
-எர்ன்ஸ்ட் ரோம் (1931–1934)
-விக்டர் லுட்ஸ் (1934–1943)
-வில்ஹெம் ஷிப்மன் (1943–1945)

ஸ்ட்ரோமப்டேலுங் Sturmabteilung, (Assault detachment, Assault section, stormtrooper), புயல் வேகத் தாக்குனர், இப்படைப்பிரிவினரை சுருக்கமாக எஸ்ஏ (SA) என அழைக்கின்றனர். ஜெர்மனியின் திடீர்த்தாக்குதல் புரிபவர்கள் என்ற பெயர் பெற்ற அமைப்பினர், ஊர்க்காவல் படைப்பிரிவினராக ஆரம்பகாலத்தில் செயல்பட்டனர். இட்லரின் செல்வாக்கு ஜெர்மனியில் உயர்ந்து கொண்டிருந்த நேரத்தில் இவ்வமைப்பினரின் செயல்பாடு துவங்கியது. இவர்கள் காவிச்சட்டையர் (Brown Shirts) எனவும் அழைக்கப்பட்டனர். இவர்கள் சுத்ஸ்டாப்பெல் அமைப்பின் உடை வண்ணத்தில் வேறுபட்டனர் சுத்ஸ்டாப்பெல் உடை கருப்பு வண்ணம் கொண்டது. முதலாம் உலகப் போர் முடிவுற்ற சமயத்தில் இவ்வமைப்பினர் உருவாக்கப்பட்டனர். இதுவே நாசி அமைப்பினரின் முதல் ஊர்க்காவல் படைப்பிரிவாக உருவாக்கப்பட்டது. 1919 ம் ஆண்டில் இவ்வமைப்பு முதல் உலகப்போரில் ஜெர்மானியரின் இராணுவத்திற்கு பெரிதும் உதவியது. பெருங்கூட்டத்துடன் சென்று திடீரென்று பாய்ந்து தாக்கி எதிரியை நிலை குலைய வைத்தனர். இவர்களின் புயல் வேகத்தாக்குதலினால் 1918 ல் நடந்த கேப்பரிட்டோ போரில் இத்தாலியருக்கு எதிராக நடந்த போரில் இத்தாலியரின் படைகளை பல மைல்கள் பின் வாங்கச்செய்தது குறிப்பிடத்தக்கது. 1920களில் இப்படையினர் பொதுவுடமைவாதிகளையும், ஜனநாயக அமைப்பினரையும் ஒடுக்குவதற்கு பெரிதும் உதவிபுரிந்தனர். இதன் பெயர் அக்டோபர் 5 , 1921 ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதுவரை இவர்கள் மறைமுகப் பெயரினாலேயே மற்றும் பல ஜிம்னாசிய விளையாட்டுக் குழுக்களின் பெயர்களில் அரசாங்கத்தின் பார்வையில் இருந்து விலகி செயல்பட்டு வந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Were the Nazis Socialists?". September 5, 2017. Archived from the original on November 16, 2021. பார்க்கப்பட்ட நாள் February 13, 2021.
  2. Roßbach, Gerhard (1950). Mein Weg durch die Zeit. Erinnerungen und Bekenntnisse. Weilburg/Lahn : Vereinigte Weilburger Buchdruckereien.
  3. William L. Shirer, The Rise and Fall of the Third Reich (1960) p. 42
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ட்ரோமப்டேலுங்&oldid=4103714" இலிருந்து மீள்விக்கப்பட்டது