விட்டுணுவர்தனன்
விட்டுணுவர்தனன் | |
---|---|
விட்டுணுவர்தனன் | |
போசள மன்னன் | |
ஆட்சிக்காலம் | அண். 1108 – அண். 1152 CE |
முன்னையவர் | முதலாம் வீர வல்லாளன் |
பின்னையவர் | முதலாம் வீர நரசிம்மன் |
பிறப்பு | பிட்டி தேவன் |
துணைவர் | சந்தலதேவி, லெச்சுமிதேவி |
அரசமரபு | போசளப் பேரரசு |
மதம் | வைணவ சமயம் (சைன சமயத்திலிருந்து மாற்றப்படுதல்) [1][2][3][4] |
போசளப் பேரரசர்கள் (1026–1343) | ||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||||||||
விஷ்ணுவர்தனன் ( ஆங்கிலத்தில் Vishnuvardhana, கன்னடத்தில் : ವಿಷ್ಣುವರ್ಧನ) (1108-1152), என்பவன் போசாள மரபைச் சேர்ந்த மன்னனாவான். இவன் கி.பி.1108-இல் தன் அண்ணனான முதலாம் வீர வள்ளாளன் இறந்த பிறகு, மன்னனானான். முதலில், தன் முன்னோர்களைப்போலவே சமண சமயத்தைப் பின்பற்றுபவனாக இருந்தான். பிட்டி தேவா என அழைக்கப்பட்ட இவன், வைணவ தத்துவாதியான இராமாணுசரால் வைணவராக்கப்பட்டு, "விட்டுணுவர்தனன்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டான்.[5]
இவன் தனது ஆட்சி சுயாட்சி பெறவேண்டி மேலைச் சாளுக்கிய மன்னரான ஆறாம் விக்ரமாதித்யனுடன் போராடி அதில் வெற்றிபெற்றான். மேலும் சோழர் மேலாதிக்கத்தில் இருந்த கங்கப்பாடி (தற்போதைய தெற்கு கருநாடகம், கொங்கு நாட்டின் வடபகுதி) பகுதிகளின் சில பகுதிகளைத் தன் அரசுடன் இணைத்துக்கொண்டான்.[6] வரலாற்றாசிரியர்கள் விட்டுணுவர்தனை போசாள மன்னர்களில் சிறந்தவனாகக் கருதுகின்றனர்.
இவன் காலத்தில் கன்னட இலக்கிய வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. பல இலக்கியங்களும் படைக்கப்பட்டன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Govindāchārya 1906, ப. 180.
- ↑ Stein 1989, ப. 16.
- ↑ Menon 2013, ப. 127.
- ↑ Smith 1920, ப. 203.
- ↑ Alkandavilli Govindāchārya (1906), "The life of Ramanujacharya: the exponent of the Visistadvaita philosophy", page 180, Publishers - S. Murthy and Co., Madras
- ↑ Sen (1999), pp.386-387, p.485