வலிப்பு
வலிப்பு என்பது கீழே விழுந்து சிலர் மயக்க நிலையில் இருப்பவர் அரைகுறை மயக்கமடைவதும், தானாக தன் தேவைக்கேற்ப நீட்டி மடக்க முடியாத பாகங்களை நீட்டி மடக்குவதையும் காணமுடியும். இவையனைத்தும் ஆழ்மனதின் பிரதிபலிப்பேயாகும். ஒரு சிலருக்கு இத்தகைய மயக்கத்தோடு இத்தகைய வலிப்பு நோய் ஏற்படுவதும் உண்டு.
இத்தகைய நோயாளிகளில் ஒரு சிலருக்கு பார்வை இழப்பு ஏற்படும். காது மந்தம் அல்லது காதுகேட்காமல் போய்விடும். சிலருக்கு ஒருகை, ஒருகால் செயலிழந்து பக்கவாதம் போல் ஆகிவிடும், திடீரென சிலருக்கு இரண்டு கால்கள் மட்டும் செயலிழந்துவிடும். சிலரின் உடல் முழுவதும் துடித்துக்கொண்டே இருக்கும். இவையனைத்தும் ஆழ்மன பிரதிபலிப்பே ஆகும். ஆழ்மனதிற்கு ஒவ்வாத வீட்டு சூழ்நிலை, அலுவலக சூழ்நிலைகள், பள்ளிக்கூட சூழ்நிலைகளிலிருந்து தற்காலிகமான மனம் தனக்கேற்ற ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக தோன்றும் ஓர் மன உடல் இயக்க மாற்றமே இத்தகைய அறிகுறிகளே தவிர நடிப்போ நாடகமோ இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.