[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

யோவான் 3:16

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காகிதக் கோப்பையில் அச்சடிக்கப்பட்ட யோவான் 3:16.

யோவான் 3:16 (யோவான் நற்செய்தி, அதிகாரம் 3, வசனம் 16) கிறித்தவ விவிலியத்திலிருந்து மிகவும் அதிகமாகக் கையாளப்படும்[1] மிகவும் புகழ்பெற்ற[2]வசனமாகும். இவ்வசனம் பாரம்பரிய கிறித்தவத்தின் கருப்பொருளை சுருக்கமாக எடுத்தியம்புவதால் இது நற்செய்தியின் சுருக்கம் எனவும் அழைக்கப்படுகின்றது.[3]:

தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.

— யோவான் 3:16

விவிலியத்தில் இவ்வசனத்தின் சூழமைவு

[தொகு]
நிக்கதேமின் உருவச்சிலை.

புதிய ஏற்பாட்டில் யோவான் நற்செய்தியின் மூன்றாம் அதிகாரத்தில் இவ்வசனம் அமைந்துள்ளது. இவ்வசனம் எருசலேமில் இயேசுவுக்கும் யூதத் தலைவர்களுள் ஒருவரான நிக்கதேமுக்கும் இடையே நிகழும் உரையாடலில் வருகின்றது. இந்த நிகழ்வின் துவக்கத்தில் நிக்கதேம் இயேசுவை ரபி என அழைத்து, இயேசு கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை அவர் செய்த அடையாளங்களை வைத்து நம்புவதாக தெரிவிக்கின்றார். அதற்கு இயேசு, "ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன்."என்று கூறி தனது போதனைகளின் சுருக்கமாக இவ்வசனத்தை குறிக்கின்றார்.

மூலம்

[தொகு]

இவ்வசனத்தின் மூலம் கிரேக்க மொழியில் பின்வருமாறு அமைந்துள்ளது (மேலெழுத்தில் உள்ளவை தொடர்புடைய ஸ்டிராங்கின் எண்கள்) :

Οὕτως3779 γὰρ1063 ἠγάπησεν25 3588 Θεὸς2316 τὸν3588 κόσμον2889, ὥστε5620 τὸν3588 Υἱὸν[4] 5207 τὸν3588 μονογενῆ3439 ἔδωκεν1325, ἵνα2443 πᾶς3956 3588 πιστεύων4100 εἰς1519 Αὐτὸν846 μὴ3361 ἀπόληται622 ἀλλ᾽235 ἔχῃ2192 ζωὴν2222 αἰώνιον166

இவற்றையும் காண்க

[தொகு]


ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோவான்_3:16&oldid=3256229" இலிருந்து மீள்விக்கப்பட்டது