யானைப் பற்பசை
யானைப் பற்பசை (Elephant toothpaste) என்பது ஐதரசன் பெராக்சைடு விரைவாக சிதைவடைவதால் உண்டாகும் ஒரு நுரைபடிந்த பொருள் ஆகும்.[1][2][3] மிகவும் குறைவான வினைபடு பொருள்கள் இச்சோதனைக்குத் தேவைப்படுவதால், பெரும்பாலும் வகுப்பறைகளில்[1][2][3] இச்சோதனையைச் செய்துகாட்டி நுரை எரிமலை செய்யப்படுகிறது. சிலசமயங்களில் இச்சோதனையை "மார்சுமலோ சோதனை" (Marshmallow Experiment) என்றும் அழைப்பார்கள். ஆனால் இச்சோதனை உளவியல் சார்ந்த ஸ்டான்போர்டு மார்சுமலோ சோதனையுடன் தொடர்பில்லாதது ஆகும்.
விளக்கம்
[தொகு]முதலில் செறிவூட்டப்பட்ட (30%), ஐதரசன் பெராக்சைடுடன் திரவ சவர்க்காரம் கலக்கப்படுகிறது. பின்னர் மிக விரைவில் ஐதரசன் பெராக்சைடு சிதைவடைய வேண்டுமென்பதற்காக ஒரு வினையூக்கி, பெரும்பாலும் பொட்டாசியம் அயோடைடு சேர்க்கப்படுகிறது. ஐதரசன் பெராக்சைடு ஆக்சிசன் மற்றும் தண்ணீர் எனவிரண்டாகச் சிதைவடைகிறது. குறைவான அளவு ஐதரசன் பெராக்சைடு அதிகமான அளவு ஆக்சிசனை உற்பத்தி செய்து அதை கொள்கலனுக்கு வெளியே தள்ளுகிறது. சவர்க்காரம் கலந்த நீர் ஆக்சிசனை தடுத்து குமிழ்களை உருவாக்கி பின்னர் நுரையாக மாற்றுகிறது. வினையூக்கி சேர்க்கப்படுவதற்கு முன்பே நிறமூட்டுவதற்காக வண்ணப்பொடிகளும் சேர்க்கப்படுவதுணடு.
வேதியியல் விளக்கம்
[தொகு]இவ்வினை ஐதரசன் பெராக்சைடின் (H2O2) வினையூக்கிசார் சிதைவடைதலை வெளிப்படுத்துகிறது. பொதுவாக ஐதரசன் பெராக்சைடு, ஆக்சிசன் மற்றும் தண்ணீர் எனவிரண்டாக சிதைவடைவது உணர்ந்து கொள்ளும் அல்லது அளவிடும் அளவுக்கு மிகமெதுவாக நிகழும் செயலாகும்.
- 2H2O2 → 2H2O(l) + O2(g)
பொட்டாசியம் அயோடைடில் உள்ள அயோடைடு அயனி இவ்வினையில் வினையூக்கியாகச் செயல்படுகிறது. இவ்வினையூக்கி வினையில் எந்தவித பாதிப்பும் அடையாமல் வினைவழிமுறையில் மாற்றம் ஏற்படுத்தி வினைச் செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
H2O2 + I− → H2O + IO− H2O2 + IO− → H2O + O2 + I−
2H2O2 → 2H2O(l) + O2(g) ΔrH° = −196 kJ/mol
இவ்வினை ஒரு வெப்பம் உமிழ்வினை ஆகும்; வினையில் உற்பத்தியாகும் நுரையும் மிகவும் சூடாக இருக்கும்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Elephant's Toothpaste" (PDF). University of Utah Chemistry Demonstrations. University of Utah. Archived from the original (PDF) on 23 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 March 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 2.2 "Elephant's Toothpaste - Kid Version". Steve Spangler Science. Archived from the original on 18 March 2014. பார்க்கப்பட்ட நாள் 21 March 2014.
- ↑ 3.0 3.1 "Catalytic Decomposition of H2O2 - Elephant's Toothpaste" (PDF). NCSU Department of Chemistry Lecture Demonstrations. North Carolina State University. Archived from the original (PDF) on 28 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 21 March 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- The Elephant's Toothpaste Experiment sciencebob.com