[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

மோர்கன் சுவாங்கிராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோர்கன் சுவாங்கிராய்
Morgan Tsvangirai
சிம்பாப்வேயின் 2வது பிரதமர்
பதவியில்
15 பெப்ரவரி 2009 – 11 செப்டம்பர் 2013
குடியரசுத் தலைவர்ராபர்ட் முகாபே
முன்னையவர்ராபர்ட் முகாபே (1987)
பின்னவர்பதவி கலைக்கப்பட்டது
சனநாயக மாற்றத்துக்கான இயக்கத்தின் தலைவர்
பதவியில்
30 செப்டம்பர் 1999 – 14 பெப்ரவரி 2018
முன்னையவர்கிப்சன் சிபாண்டா
பின்னவர்நெல்சன் சாமிசா
எதிர்க்க்கட்சித் தலைவர்
பதவியில்
30 செப்டம்பர் 1999 – 14 பெப்ரவரி 2018
சிம்பாப்வே தொழிற்சங்கங்கப் பேரவை
பதவியில்
10 மே 1987 – 30 செப்டம்பர் 1999
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மோர்கன் ரிச்சார்டு சுவாங்கிராய்

(1952-03-10)10 மார்ச்சு 1952
குட்டு, தெற்கு ரொடீசியா
இறப்பு14 பெப்ரவரி 2018(2018-02-14) (அகவை 65)
ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்கா
காரணம் of deathபெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய்
அரசியல் கட்சிசிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம் (Before 1987)
ZANU-PF (1987–1999)
சனநாயக மாற்ரத்திற்கான இயக்கம்
துணைவர்(கள்)
சூசன் முந்துவா
(தி. 1978; இற. 2009)

எலிசபெத் (தி. 2011)
பிள்ளைகள்7
கையெழுத்து
இணையத்தளம்அரச இணையதளம்
கட்சி இணையதளம்

மோர்கன் ரிச்சார்ட் சுவாங்கிராய் (Morgan Richard Tsvangirai; மார்ச் 10, 1952 - பெப்ரவரி 14, 2018) என்பவர் சிம்பாப்வேயின் ஒரு பிரபல தொழிற்சங்கத் தலைவரும், மனித உரிமை ஆர்வலரும் ஆவார். சனநாயக மாற்றத்துக்கான இயக்கம் என்ற முக்கிய எதிர்க்கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இக்கட்சியே ஏப்ரல் 2008 இல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது[1]. 2002 இல் இடம்பெற்ற அதிபார் தேர்தலில் ரொபேர்ட் முகாபேயுடன் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். பின்னர் ஏப்ரல் 2008 இல் இடம்பெற்ற அதிபருக்கான முதற் சுற்றுப் போட்டியில் முன்னணியில் இருந்தாலும் அதிகாரபூர்வ முடிவுகளின்படி அவரால் பெரும்பான்மையைப் பெறமுடியவில்லை. நாட்டில் முகாபே ஆதரவாளர்களினால் தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றமையைக் காரணம் காட்டி ஜூன் 27 இல் இடம்பெற்ற இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் இவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தேர்தல் சுதந்திரமாக இடம்பெறாது என அவர் குற்றம் சாட்டினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Final House of Assembly Results". Zimbabwe Metro. Archived from the original on 2008-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-06-28.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோர்கன்_சுவாங்கிராய்&oldid=3792295" இலிருந்து மீள்விக்கப்பட்டது