மூளைச் சேதம்
மூளைச் சேதம் |
---|
மூளைச் சேதம் அல்லது மூளைக் காயம் (brain injury, BI) என்பது மூளை செல்கள் அழிதல் அல்லது சிதைவடைதலைக் குறிக்கிறது. மூளைக் காயங்கள் பொதுவாக உள் மற்றும் வெளிப்புறக் காரணிகளால் ஏற்படுகின்றன. எதிர்பாராத அதிர்ச்சியால் தூண்டப்பட்ட வலுவடைந்த நரம்பு சேதத்தினால் பரவலான மூளைச் சேதம் ஏற்படுகிறது.
அறிகுறிகள்
[தொகு]மூளைக் காயத்தின தீவிரம் மற்றும் எந்த அளவிற்கு மூளை பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை அடிப்படையாகக் கொண்டு அறிகுறிகள் வேறுபடுகின்றன. மூன்று விதமாக மூளைக் காயத்தின் தீவிரம் மூன்று பிரிவுகளில் வகைபடுத்தப்பட்டுள்ளது. மூளை காயங்கள், இலேசான மிதமான அல்லது கடுமையான[1]
இலேசான மூளைக் காயங்கள்
[தொகு]இலேசான மூளைக் காயத்தின் அறிகுறிகள் தலைவலி, குழப்பங்கள், வளைந்த காதுகள், சோர்வு, உறக்க மாற்றங்கள், மனநிலை அல்லது நடத்தை. பிற அறிகுறிகள் நினைவகம், செறிவு, கவனத்தை அல்லது சிந்தனை[2] இவற்றில் ஏற்படும் பிரச்சனைகள்.
மிதமான/கடுமையான மூளைக் காயங்கள்
[தொகு]அறிந்து கொள்வதில் ஏற்படும் அறிதிறன் குழப்பம், அசாதாரண நடத்தை, பேச்சு குழைதல், கோமா அல்லது மற்ற உணர்வு கோளாறுகள் இதன் அறிகுறிகளில் அடங்குகின்றன. உடல் அறிகுறிகள் - தலைவலி அல்லது மோசமான வாந்தி அல்லது குமட்டல், வலிப்பு, அசாதரணமாக கண்கள் விரிவடைதல், தூக்கத்தில் இருந்து எழ இயலாமை, பலவீனம், ஒருங்கிணைப்பு இழத்தல் முதலியன.
குழந்தைகளிடம் காணும் அறிகுறிகள்
[தொகு]குழந்தைகளிடம் காணப்படும் அறிகுறிகளில் இவை அடங்குகின்றன. உணவுப் பழக்கத்தில் மாற்றங்கள், தொடர்ந்து எரிச்சல் அல்லது சோகம், கவன மாற்றங்கள், தூக்கம் பாதிக்கப்பட்ட பழக்கம், பொம்மைகள் மீது குறைந்த ஆர்வம்.
காரணங்கள்
[தொகு]மூளைக் காயங்கள் தலைக்கு வெளியே ஏற்பட்ட காயங்கள், தலைக்கு உள்ளே ஏற்பட்ட காயங்கள், வேகமாக ஏற்பட்ட காயங்கள், நச்சு இரசாயனங்கள் வெளிப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை, கட்டிகள், தொற்று, பக்கவாதம்[3] என பல காரணங்களால் ஏற்படுகின்றன. மூளைக் காயங்கள் ஏற்பட மிக பரவலான காரணங்கள் நோய்கள், மற்றும் காயங்கள். பிறந்த போது ஏற்படும் தாழாக்சியம் பரந்த மூளை சேதம் பிறந்த ஏற்பட காரணமாகும்.[4] நெடுங்காலம் தாழாக்சியம்[4] (பற்றாக்குறை ஆக்ஸிஜன்), நச்சு மூலம் கருவளர்ச்சி குறைபாடு (உட்பட மது), தொற்று, மற்றும் நரம்பியல் குறைபாட்டு நோய். மூளை கட்டிகள் மண்டையின் அழுத்தத்தை அதிகரிப்பதும் மூளைச் சேதம் ஏற்படக் காரணமாகிறது.
குறையறிதல்
[தொகு]கிளாஸ்கோ கோமா அளவீடு (GCS) மூளை காயத்தின் தீவிர நிலையை அறிய மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் மதிப்பீட்டு முறையாகும். இதில் குறிப்பிட்ட பண்புகள் புறவய உற்றுநோக்கு முறையினால் உற்றுநோக்கப்பட்டு மூளை காயத்தின் தீவிர தன்மை அறியப்படுகிறது. அடிப்படையில் கண் திறப்பு, வாய்மொழி பதில், மற்றும் அசைவு (இயக்கம்) பதில், முதலிய மூன்று பண்புகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.[5] கிளாஸ்கோ கோமா அளவீட்டின் அடிப்படையில் மூளைக் காயத்தின் தீவிரம் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது , தீவிரமான மூளை காயங்கள் மதிப்பெண் 3-8, மிதமான மூளை காயங்கள் மதிப்பெண் 9-12 மற்றும் இலேசான மூளைக் காயங்கள் மதிப்பெண் 13-15.
மேலாண்மை
[தொகு]மூளைக் காயத்தில் பாதிப்பு ஏற்பட்ட பிறகு மறுவாழ்வு செயல்களில் பல்வேறு தொழில் துறையில் உள்ளவர்கள் மருத்துவ பராமரிப்பில் ஈடுபடுகின்றனர். நரம்பியல் மருத்துவர்கள், நரம்பியல் வல்லுநர்கள், மற்றும் மூளை காயம் சிறப்பு சிகிச்சை மருத்துவர்கள் இதில் அடங்குகின்றனர். நரம்புசார் உளவிலயலாளர்கள்(குறிப்பாக மருத்துவ நரம்பு சார் உளவியலாளர்கள்) உளவியலாளர்கள் மூளைக் காயத்தின் தீவிரத்தை மதிப்பீடு செய்து அதற்கான புனர்வாழ்வு உத்திகளை உருவாக்குகின்றனர்.
உடலியக்க மருத்துவர்கள், மூளைக் காயம் பாதிப்பு ஏற்பட்ட பின் மறுவாழ்வு செயல்பாடுகளில் ஒரு குறிப்பிட்ட பங்கு வகிக்கின்றனர். முதலில் புறவழிமூளைக் காயம் (TBIs), ஏற்படும் போது பின்வரும் உடலியக்க மருத்துவம் வழங்கப்படுகிறது. உணர்ச்சி தூண்டுதல், உடற்பயிற்சி மற்றும் காற்று சார்ந்த பயிற்சி, செயல்பாட்டு பயிற்சி.[6] உணர்ச்சி தூண்டுதல் மீண்டும் புலன் உணர்வினை பெறுவதைக் குறிக்கிறது
முன்கணிப்பு(வருவதுரைத்தல்)
[தொகு]மூளைச் சிதைவின் முன்னேற்றம் அதன் தன்மை, இடம், மூளை பாதிப்பின் விளைவுகள் இவற்றில் முன்கணிப்பு செய்யப்படுகிறது. (பார்க்க முதலில் புறவழி மூளைக் காயம், மைய மற்றும் பரவலான மூளை காயம், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மூளை காயம்).
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Traumatic Brain Injury Information Page: National Institute of Neurological Disorders and Stroke (NINDS)". Archived from the original on 2016-12-03. பார்க்கப்பட்ட நாள் 2016-11-15.
- ↑ "Traumatic brain injury Symptoms - Mayo Clinic". www.mayoclinic.org. பார்க்கப்பட்ட நாள் 2016-11-15.
- ↑ "TBI: Causes of Traumatic Brain Injury". www.traumaticbraininjury.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-15.
- ↑ 4.0 4.1 "Birth Hypoxia and Brain Damage to Newborns". Michael E. Duffy. Archived from the original on 2013-08-05. பார்க்கப்பட்ட நாள் 2013-07-27.
- ↑ "What Is the Glasgow Coma Scale?". பார்க்கப்பட்ட நாள் 2016-11-15.
- ↑ Hellweg, Stephanie; Johannes, Stonke (February 2008). "Physiotherapy after traumatic brain injury: A systematic review of the literature". Brain Injury 22 (5): 365–373. doi:10.1080/02699050801998250. பப்மெட்:18415716.