முசுந்தி பள்ளிவாசல்
முசுந்தி பள்ளிவாசல் | |
---|---|
Muchundi Mosque | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | கோழிக்கோடு, குட்டிச்சறா |
புவியியல் ஆள்கூறுகள் | 11°14′31″N 75°46′36″E / 11.24194°N 75.77667°E |
சமயம் | சுன்னி இசுலாம் - சூபியிசம் |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கோழிக்கோடு |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | கி.பி. 13 ஆம் நூற்றாண்டு |
முசுந்தி பள்ளி ( மலையாளம் : മുച്ചുന്തിപ്പള്ളി, Muchundi Mosque, Muccunti Palli, முன்னர் Muchiyan/Machinde/Muchandi Palli [1] ) என்பது இந்திய மாநிலமான கேரள மாநிலத்தின் கோழிக்கோடு நகரின் குட்டிச்சிறாவில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசல் ஆகும். குட்டிச்சிறா என்பது கோழிக்கோடு நகரில் இடைக்கால முஸ்லீம் குடியிருப்பாகும்.[2][3][4] இது மிஸ்கல் பள்ளிவாசல், குட்டிச்சிறா குளம் மற்றும் குட்டிச்சிறா ஜும்ஆ மசூதி ஆகியவற்றிற்கு தெற்கே அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையை நடத்துவதில்லை - வெள்ளிக்கிழமை சிறப்பு நண்பகல் சேவையில், போதிய நேரமுள்ள வயது வந்த, ஆண், முஸ்லிம்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.
தற்போதைய இந்த பள்ளிவாசலின் அமைப்பானது கேரள கட்டிடக்கலை பாணியில், மினார்கள், குவிமாடங்கள் அல்லது வளைவுகள் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. பள்ளிவாசலின் விதானத்தில் குர்ஆன் வசனங்களின் விரிவாக எழுதப்பட்டுள்ளன. அதன் பக்கத்தில் பூச் செதுக்கல்களால் அழகூட்டபட்டுள்ளது. [5]
முசுந்தி பள்ளிவாசலில் கி.பி 13 ஆம் நூற்றாண்டய பழங் கல்வெட்டு உள்ளது. [6] கேரள முஸ்லிம்களுக்கு இந்து மன்னரான (கோழிகோட்டின் சாமுத்திரிகள்) பள்ளிவாசலுக்கு இடம் வழங்கிய ஓரே ஆவணப் பதிவு இந்த கல்வெட்டு ஆகும். [3]
குறிப்புகள்
[தொகு]- ↑ Madras High Court (Muthala Kandi Katturi Koya Molla vs Palli Veetil Abu Baker on 16 July 1912) Equivalent citations: 17 Ind Cas 386 Author: S Aiyar Bench: S Aiyar, S Aiyar
- ↑ Narayanan, M. G. S, 'The Zamorin's Gift to the Muccunti Mosque' in Cultural Symbiosis in Kerala, Thiruvananthapuram: Kerala Historical Society, 1972.
- ↑ 3.0 3.1 M. G. S. Narayanan. "Kozhikkodinte Katha". Malayalam/Essays. Mathrubhumi Books. Second Edition (2017) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8267-114-0
- ↑ Kerala Tourism Kuttichira (Calicut)
- ↑ Sakkeer Hussian. E. M. (2016) "ADVENT OF ISLAM IN KERALA AND SOCIAL HARMONY AS REFLECTED IN MANUSCRIPTS" Centre for Manuscriptology Sree Sankaracharya University of Sanskrit (Kerala)
- ↑ Proceedings - Indian History Congress, 59th Session Patiala. Indian History Congress (1999) pp. 396 - 402