[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:எருசலேம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எருசலேம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

Hi guys, i am the author of the of the Jerusalem western wall panorama picture which you use in your article. And i wanted to ask you: would you please translate the description of the picture in tamil language ? Would be really nice. Thanks in advance Sheepdog85 (பேச்சு) 22:33, 2 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

There are two pictures of Western wall in this article, which has been already translated into Tamil with exact description. FYI:
எருசலேம்: அழுகைச் சுவர் (மேற்குச் சுவர்) விரிநோக்கு; பின்னணியில் பாறைக் குவிமாடமும் (இடப்புறம்), அல்-அக்சா மசூதியும் (வலப்புறம்).

--Anton (பேச்சு) 02:02, 3 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

Hi, no i mean, if you click on the panorama picture, you will see big version of it, and on this page are the descriptions in german, russian, japanese etc, it would be nice to have a tamil description too. Sheepdog85 (பேச்சு) 23:01, 23 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
Done.--Anton (பேச்சு) 01:59, 24 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
Thank you ! Sheepdog85 (பேச்சு) 11:41, 26 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

எருசலேம்: முக்கிய வரலாற்று நிகழ்வுகள்

[தொகு]

எருசலேம்: முக்கிய வரலாற்று நிகழ்வுகள் - இப் பகுதியை ஓர் தனிக் கட்டுரையாக்குவது பொருத்தமாக இருக்குமா? --Anton (பேச்சு) 02:06, 17 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

  • Anton, வரலாற்றுக் குறிப்புகளைத் தொகுத்தபோதே எனக்கு அந்த எண்ணம் எழுந்தது. முக்கியக் கட்டுரையில் இணைப்புக் கொடுத்துவிட்டு, வரலாற்று நிகழ்வுகளைத் தனிக் கட்டுரையாக இடுவது பொருத்தம் என்றே எனக்குப் படுகிறது.--பவுல்-Paul (பேச்சு) 02:25, 17 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
அவ்வாறே செய்யுங்கள் பவுல்.--Kanags \உரையாடுக 02:40, 17 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Anton (பேச்சு) 03:11, 17 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

யெரூசலம் அல்லது எருசலேம் (Jerusalem) என்னும் நகரத்தை இசுரயேல் நாடு தன் தலைநகரமாகக் கருதுகிறது.

[தொகு]

இக் கட்டுரை ஆங்கில விக்கியின் இசுரேலிய சார்பை இங்கும் முழுமையாக வெளிப்படுத்துகிறது. இவ்வாறு தவிர்ப்பது நன்று. ஆங்கில விக்கியிலும் கூட இக் கூற்று கேள்விக்கு உட்படுத்தப்படுள்ளது. --Natkeeran (பேச்சு) 04:16, 17 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

இரண்டு பக்கமும் இதனை தமது நகரமாகவே கருதுகிறார்கள். எனவே அக் கருத்தே வரவேண்டும் என்று கருதுகிறேன். --Natkeeran (பேச்சு) 04:19, 17 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

எருசலேம் (Jerusalem) என்னும் நகரத்தை இசுரயேல் நாடு தன் தலைநகரமாகக் கருதுகிறது என்பதை சர்ச்சைக்குரிய விடயமாக எடுத்திருக்கத் தேவையில்லை. எனினும் தற்போதுள்ள வரிகள் பொருத்தமாகவுள்ளன. மேலும், இறைமையுள்ள நாடு தன் ஆட்சிப் பகுதியை தலைநகராக அறிவித்ததை சர்ச்சையாக கலைக்களஞ்சியத்தில் கருத வேண்டிய தேவையென்ன? --Anton (பேச்சு) 06:47, 17 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

  • கலைக்களஞ்சியத்துக்குச் சர்ச்சை இல்லை. ஆனால் சர்ச்சை உள்ளது என்று சுட்டிக்காட்டுவது கலைக்களஞ்சியத்தின் நடுநிலைமையைக் காட்டுகிறது என்று கருதுகிறேன். --பவுல்-Paul (பேச்சு) 08:02, 17 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

எருசலேம் இசுரேலின் தலைநகரா இல்லையா? அல்லது கருதுகின்றதா? எருசலேம் இசுரேலின் தலைநகர் என்பதற்கான தகுந்த உசாத்துணை இணைக்கப்பட்டிருந்தும், இசுரேல் எருசலேமை தலைநகர் கருதுகின்றது என மாற்றி எழுதத் தேவையில்லை. அப்படியானால் உசாத்துணை எதற்கு? உசாத்துணை ஒரு கருத்தை வலியுறுத்த கட்டுரை இன்னுமொரு கருத்திக் கூறுகின்றது. --Anton (பேச்சு) 08:32, 17 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]


அன்ரன், நீங்கள் காட்டும் சான்றுக்கு மாற்றுச் சான்றுகள் பல உண்டு. இது தொடர்பாக கருத்துவேறுபாடுகள் உண்டு என்பது உலகறிந்த விடயம். எனவே இசுரேல் சார்பாக பட்டும் அறிமுகப் பத்தி அமைவது சற்றும் பொருந்தாது.

"Until Palestine was occupied Jerusalem had been the capital of Palestine with a happy, prosperous, proud, highly advanced and cultured citizenry of various denominations and creeds: Muslims, Christians and Jews, living side by side in amity and matter of tolerance if not friendliness as any civilized city, more so immortal Jerusalem, the spiritual home and cradle of universal civilization. " [1]

"Palestinians also lay claim to Jerusalem as the capital of a future Palestinian state. The city is considered to be the third-holiest city in Islam, home to the Dome of the Rock and the Al-Aqsa Mosque – located on the very site where the Jewish temple is believed to have been built – and long ruled by the Ottoman Empire."[2] --Natkeeran (பேச்சு) 02:54, 18 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

King David was the person who founder Jerusalem as the capital of the Jewish people. פארוק (பேச்சு) 22:04, 18 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

உண்மை, நக்கீரன். //Jerusalem had been the capital of Palestine // Jerusalem had been the capital of Israel during King David era, which has long history before Ottoman Empire. என்றும் இருக்கும் என நம்புகிறேன். :) எனவே அரசியல்சார் விடயத்திற்கு அப்பால், சரியான தகவல் அமைய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. இசுரேல் கட்டுரை, அதன் தலைநகராக எருசலேமைக் குறிப்பிட, இக்கட்டுரையோ கருதுவதாகக் குறிப்பிடுகிறது. அவ்வாறாயின் இசுரேல் எனும் கட்டுரையும் கேள்விக்குட்படுத்த வேண்டியதே. இதில் எது சரி? இசுரேலின் தலைநகர் எது? இசுரேலை பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அதற்காக இசுரேல் என்ற ஓர் நாடு இல்லை என்ற அர்த்தத்தில் விக்கியில் கட்டுரை அமைப்பதா? --Anton (பேச்சு) 03:20, 18 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

அவ்வாறு வரலாற்றுப் பக்கத்தில் இருப்பதில் தவறில்லை. ஆனால் இரு பக்கங்களும் அது தமதே எனும் போது, இசுரேலினது மட்டும் என்று கூற முடியாது. அந்தச் சர்ச்சையை இங்கு முறையாச் சுட்ட வேண்டும். இசுரேல் என்ற நாடு தொடர்பான கட்டுரையில் இந்த விதமான சர்ச்சைகள் முறையாக் குறிப்பிட வேண்டும். காசுமீர் பற்றிய கட்டுரை எழுதினாலும், திபெத் பற்றிய கட்டுரை எழுதினாலும், தமிழீழம் பற்றிய கட்டுரை எழுதினால் இதுவே வழக்காக அமையும். --Natkeeran (பேச்சு) 05:38, 18 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
இருவேறு முரண்பாடான கருத்துக்களுடன் கட்டுரைகள் இருப்பதை விக்கி அனுமதிக்கிறதா? ஒரு கட்டுரை இசுரேலின் தலைநகர் எருசலேம் என்கின்றது. இன்னுமொன்று இல்லை எனும் அர்த்தத்தில் அமைகின்றது. இறைமையுள்ள நாடு தன் தலைநகர் இதுதான் எனக் குறிப்படும்போது, விக்கி எவ்வாறு அதை மறுதலிக்க முடியும்? --Anton (பேச்சு) 21:40, 18 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

மறுப்புத் தெரிவிப்பதற்கு வருந்துகிறேன். யெரூசலம் அல்லது எருசலேம் (Jerusalem) என்பது இசுரயேலின் தலைநகரும் பழமைமிக்க நகரும் ஆகும். என்றிருப்பதோடு, அதற்கு மறுப்பான கருத்துக்களும் (ஏற்கெனவே இருப்பதுபோல்) இருப்பதுதானே வழக்கு? பாலஸ்தீனம் பற்றிய ஆ.வி. கட்டுரையில் அதன் தலைநகர் எருசலேம் எனக்குறிப்பிட்டு, அதற்கு மறுப்பான கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. --Anton (பேச்சு) 21:40, 18 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

யெரூசலம் இசுரேலின் தலைநகரம் என்று இசுரேல் தவிர வேறும் யாரும் ஏற்றுக் கொண்ட மாதிரித் தெரியவில்லை. பார்க்க: en:Positions on Jerusalem. ஆகவே அவ்வாறு இறுதியான கருத்தைத் தரும் ஒரு வசனத்தை அறிமுக வசனமாக வைப்பது உண்மைக்குப் புறம்பாக அமையும். இப்பொழுது உள்ள அறிமுகம் சர்ச்சையை தெளிவாக எடுத்துரைக்கிறது. இத்தோடு இனிமேல் இது தொடர்பாக நான் கருத்துக் கூற விரும்பவில்லை. --Natkeeran (பேச்சு) 22:28, 18 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
  • Anton, (POV) குறி இட்டது எதற்காக என்பது தெரிகிறது. அது குறிப்பிடும் சர்ச்சையை எவ்வாறு தீர்க்கலாம் என்பதும் தெரிகிறது. எனவே தேவையான மாற்றங்களைச் செய்துவிட்டு (POV) குறியை அகற்றுவது தானே பயனர்களுக்கு நன்மை பயக்கும்? ஆங்கில விக்கியில் "Jerusalem" கட்டுரையைப் பார்த்தேன். அதில் "எருசலேம் இசுரயேலின் தலைநகர்" என்பதற்குப் பின் அக்கூற்றின் "neutrality disputed" என்றும், அதைத் தொடர்ந்து "though not internationally recognized as such" என்னும் சொற்றொடரும் ஒரே வாக்கியத்தில் உள்ளன. இப்போதுள்ள ஆங்கிலக் கட்டுரையை அப்படியே மொழிபெயர்ப்பதாக இருந்தால், "எருசலேம் என்பது, பன்னாட்டு கணிப்புக்கு மாறாக இசுரயேலின் தலைநகர் ஆகும் (நடுநிலை கேள்விக்குரியது)" என்று போடவேண்டியிருக்கும். ஆங்கிலத்தை அப்படியே மொழிபெயர்க்கவேண்டும் என்றில்லை என்பது விக்கிப் பயனருக்குத் தெரிந்ததே. பிறமொழி விக்கிகளின் துணையையும் நாடலாம். எனவே பிரஞ்சு மொழி விக்கியில் "எருசலேம் என்பது நடு ஆசியாவில் அமைந்து, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மதங்களுக்கும், பாலத்தீனியர், இசுரயேலர் ஆகியோருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகராகவும் விளங்குகிறது" என்பது முதல் வாக்கியம். அதைத் தொடர்ந்து, "எருசலேம் நித்திய காலத்துக்கும் தன் தலைநகராக இருக்கும் என்று 1949இல் இசுரயேல் அறிவித்தபோதிலும் பன்னாட்டளவில் எந்த நாடும் அந்த நிலைப்பாட்டை ஏற்கவில்லை. பாலத்தீனம் கிழக்கு எருசலேமைத் தன் தலைநகராக ஆக்கப்போவதாக அறிவித்துள்ளது."

பிற மொழி விக்கிகளை இன்னும் மேற்கோள் காட்டலாம். (POV) குறி கட்டுரை முழுவதையும் கேள்விக்குள்ளாக்குகிறது. அது தேவையா என்பது பற்றிச் சிந்திப்பது நல்லது. அப்படியே "neutrality disputed" போடுவதாக இருந்தால் ஆங்கிலத்தில் இருப்பதுபோலப் போட்டுவிட்டு கட்டுரை முழுவதற்குமான (POV) -ஐ அகற்றிவிடலாம். நட்கீரனைப் போல நானும் இதுதொடர்பான கருத்துப்பகிர்வை நிறுத்திக்கொள்கிறேன். நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 22:44, 18 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. பிரஞ்சு மொழி விக்கியில் உள்ளவாறு எழுதுவது சரியாக இருக்கும். இரு தரப்பும் குறிப்பிடும் சர்ச்சையை தனி தலைப்பில் இடலாம் எனக் கருதுகின்றேன். தேவையான மாற்றங்களைச் செய்துவிடுங்கள். மேலதிக விடங்களை மொழிபெயர்க்கிறேன். --Anton (பேச்சு) 01:48, 19 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

Capital of the Jewish People

[தொகு]

jerusalem was allways the capital of the jews from the time of king David until today. despite th United Nations decision in 1948 immediately after the establishment of the state that all embassies should be in Tel Aviv and not in Jerusalem. פארוק (பேச்சு) 22:01, 18 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எருசலேம்&oldid=1579108" இலிருந்து மீள்விக்கப்பட்டது