[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

பி. கே. பார்த்தசாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. கே. பார்த்தசாரதி
சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிபேனுகொண்டா
பதவியில்
2009–2019
முன்னையவர்சுனிதா
பின்னவர்மலகுண்டலா சங்கரநாராயணன்
India நாடாளுமன்றம்
இந்துப்பூர்
பதவியில்
1999–2004
முன்னையவர்ச. கங்காதர்
பின்னவர்ஜி. நிசாமுதீன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 செப்டம்பர் 1959 (1959-09-03) (அகவை 65)
ரோடம் , அனந்தபூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
துணைவர்பி. கே. கலாவதி
பிள்ளைகள்6
பெற்றோர்பி. கே நஞ்சையா, பி. கே. சஞ்சீவம்மாள்
கல்விபெங்களூர்ப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்http://164.100.47.194/Loksabha/Members/memberbioprofile.aspx?mpsno=292&lastls=13
மூலம்: [1]

பி. கே. பார்த்தசாரதி (B. K. Parthasarathi) ஆந்திர பிரதேச அரசியல்வாதி ஆவார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான இவர், பேனுகொண்டா தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.

அரசியல்

[தொகு]

1996 ஆம் ஆண்டு அனந்தபூர் மாவட்டத்தின் மாவட்ட ஊராட்சித் தலைவராக இருந்து அரசியலில் நுழைந்தார். 1999 இல், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இந்துப்பூர் தொகுதியின் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிட்டு தேர்தலில் 134,636 பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார், [1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் ச. கங்காதரைத் தோற்கடித்தார்.

2004 மக்களவைத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளர் ஜி. நிசாமுதீனிடம் 1,840 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற்றார்.

2009 தேர்தலில், இவர் பேனுகொண்டா தொகுதியில் சட்டமன்ற வேட்பாளாராகப் வேட்பாளராகப் போட்டியிட்டு, [2] காங்கிரசு கட்சியின் கே. டி. சிறீதரை 14,385 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2014 தேர்தலில், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் மலகுண்டலா சங்கரநாராயணாவை தோற்கடித்து மீண்டும் [3] வெற்றி பெற்றார். 2019 இல், மலகுண்டலா சங்கரநாராயணா [4] இவரை ஒரு பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். [5]

இவர் ஏப்ரல் 2018 இல் திருமலை திருப்பதி தேவஸ்தான குழு உறுப்பினரானார் [6] [7] 2009ல் தெலுங்கு தேசம் கட்சியின் மாவட்டத் தலைவரானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1999 India General (13th Lok Sabha) Elections Results". {{cite web}}: Missing or empty |url= (help)
  2. Service, Hans News (17 March 2019). "Penukonda, a TDP bastion for more than two decades".
  3. "Penukonda Elections Results 2014, Current MLA, Candidate List of Assembly Elections in Penukonda, Andhra Pradesh".
  4. sumadhura (24 May 2019). "YSRCP clean sweep in Anantapur district".
  5. "Penukonda Constituency Winner List in AP Elections 2019 – Penukonda Constituency MLA Election Results 2019".
  6. "Andhra Pradesh: New Tirumala Tirupati Devasthanams Trust Board has a few surprise picks".
  7. "TTD new Trust Board appointed".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._பார்த்தசாரதி&oldid=3823662" இலிருந்து மீள்விக்கப்பட்டது