நத்தையினவியல்
விலங்கியல் |
விலங்கியலின் கிளைகள் |
மானிடவியல் · |
குறிப்பிடத்தக்க விலங்கியலாளர் |
ஜார்ஜஸ் கவியர் · சார்லசு டார்வின் |
வரலாறு |
நத்தையினவியல் என்பது, முதுகுநாணிலி விலங்கியலின் ஒரு பிரிவு ஆகும். இது, விலங்கு இராச்சியத்தின் கணுக்காலிகள் தொகுதிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய தொகுதியான மெல்லுடலிகள் பற்றி ஆய்வு செய்கிறது. நத்தையினவியலின் ஒரு பகுதியான சிப்பியோட்டியல் மெல்லுடலிகளின் புற ஓடுகள் பற்றி ஆய்வு செய்கிறது.
நத்தையினவியலின் ஆய்வுத்துறை வகைப்பாட்டியல், சூழலியல், கூர்ப்பு என்பவற்றை உள்ளடக்குகின்றது. பயன்பாட்டு நத்தையினவியலில், மருத்துவம், கால்நடை மருத்துவம், வேளாண்மை ஆகிய துறைகள் சார்ந்த பகுதிகள் உள்ளடங்குகின்றன.
தொல்லியல், குறிப்பிட்ட ஒரு பகுதியின் தட்பவெப்பப் படிமலர்ச்சி, அப்பகுதியின் பயன்பாடு என்பவை பற்றிப் புரிந்துகொள்வதற்கு, நத்தையினவியலைப் பயன்படுத்துகின்றது.
1794 ஆம் ஆண்டில் மெல்லுடலிகள் தொடர்பான முதல் தொகுப்பு வெளியிடப்பட்டது. 1868 ஆம் ஆண்டில் செருமன் நத்தையினவியல் கழகம் தொடங்கப்பட்டது.