[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

தேன் பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேன் பறவை
புரோடோடிசுகசு ரெகுலசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
இன்கேட்டோரிடே
பேரினம்:
புரோடோடிசுகசு

சுந்தேவாலி, 1850
மாதிரி இனம்
புரோடோடிசுகசு ரெகுலசு[1]
சுந்தேவாலி, 1850
சிற்றினங்கள்

உரையினைக் காண்க

தேன் பறவை (Honeybird) என்பன தேன்வழிகாட்டி குடும்பத்தைச் சேர்ந்த புரோடோடிசுகசு பேரினத்தைச் சேர்ந்த பறவைகள் ஆகும். இவை சகாரா கீழ்மை ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றன.

விளக்கம்

[தொகு]

தேன் பறவை அனைத்தும் சாம்பல் அல்லது சாம்பல்-பச்சை மேற்பகுதிகள் மற்றும் சாம்பல் நிறத்திலிருந்து வெண்மை-சாம்பல் நிறத்தின் கீழ்ப் பகுதிகள் கொண்ட மந்தமான வண்ண பறவைகள் ஆகும். இவை தேன் வழிகாட்டி குடும்பத்தின் மிகச்சிறிய உயிரினங்கள் ஆகும். இக்குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடன் ஒப்பிடும்போது இவை மெல்லிய அலகுகளைக் கொண்டுள்ளன.

பழக்கவழக்கங்கள்

[தொகு]

மற்ற தேன் வழிகாட்டிகளைப் போல இவை தேன் மெழுகினை உண்பதில்லை. இவை ஸ்ட்ரெல்ட்சியா, கேலிசுடெமான் (பாட்டில் தூரிகை), முள்ளிலவு, புரசு மற்றும் பவள மரங்கள் போன்ற தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. இவை சிசுடிகோலாசு, தேன்சிட்டு மற்றும் பிற குவிமாடம்-கூடு கட்டும் பறவை இனங்களின் கூடுகளில் ஒட்டுண்ணியாக உள்ளன.

சிற்றினங்கள்

[தொகு]

மூன்று சிற்றினங்கள் இப்பேரினத்தில் உள்ளன:

படம் விலங்கியல் பெயர் பொதுப் பெயர் பரவல்
புரோடோடிசுகசு ரெகுலசு பழுப்பு முதுகு தேன் பறவை அங்கோலா, போட்சுவானா, கமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, கோட் டிவார், ஈஸ்வதினி, எத்தியோப்பியா, கென்யா, லெசோத்தோ, லைபீரியா, மலாவி, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, உருவாண்டா, சோமாலியா, தென்னாப்பிரிக்கா, சூடான், தன்சானியா, டோகோ, உகாண்டா, சாம்பியா மற்றும் சிம்பாப்வே.
புரோடோடிசுகசு சாம்பியென்சியே பச்சை முதுகு தேன் பறவை அங்கோலா, போட்சுவானா, கென்யா, மலாவி, மொசாம்பிக், நமீபியா, தன்சானியா, சாம்பியா மற்றும் ஜிம்பாப்வே.
புரோடோடிசுகசு இன்சைனிசு காசின் தேன் பறவை அங்கோலா, பெனின், கமரூன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ குடியரசு, கோட் டிவார், எத்தியோப்பியா, காபோன், கானா, கினியா, கென்யா, லைபீரியா, நைஜீரியா, செனகல், சியரா லியோன், தெற்கு சூடான், டோகோ மற்றும் உகாண்டா.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Picidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்_பறவை&oldid=3870119" இலிருந்து மீள்விக்கப்பட்டது