[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

சக்தி (2011 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சக்தி
இயக்கம்மெகர் ரமேஷ்
தயாரிப்புசி. அஸ்வினி தத்
கதைஎண்டமூரி வீரேந்திரநாத்
ஜே. கே. பாரவி
இசைமணிசர்மா
நடிப்புஇலியானா டி குரூஸ்
ஜூனியர் என்டிஆர்
மஞ்சரி பட்னிஸ்
பிரபு கணேசன்
ஜாக்கி செராப்
பூஜா பேடி
வித்யுத் ஜம்வால்[1]
ஒளிப்பதிவுசமீர் ரெட்டி
படத்தொகுப்புமார்கண்ட் கே. வெங்கடேஷ்
கலையகம்விஜயந்தி மூவிஸ்
விநியோகம்ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்
வெளியீடுஏப்ரல் 1, 2011 (2011-04-01)
ஓட்டம்161 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

சக்தி (Shakti) (English: The Strange) என்பது 2011 ஆண்டய தோல்வியற்ற தெலுங்கு வரலாற்று அதிரடி- கனவுருப்புனைவு திரைப்படமாகும். இப்படத்தை மெஹர் ரமேஷ் இயக்க இலியானா டி குரூஸ், ஜூனியர் என்டிஆர் மற்றும் மஞ்சரி பட்னிஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[2] மேலும் இந்தப் படத்தில், சோனு சூத், எஸ். பி. பாலசுப்ரமணியம், ஜாக்கி செராப், பூஜா பேடி மற்றும் தமிழ் நடிகர் பிரபு கணேசன் ஆகியோர் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை விஜயந்தி மூவிஸ் பதாகையின்கீழ் சி. அஸ்வினி தத் தயாரித்துள்ளார். படமானது 2011 ஏப்ரல் 1  அன்று வெளியானது.[3][4][5][6] படத்தின் தமிழ் மொழிமாற்றப் பதிப்பானது ஒம் சக்தி என்ற பெயரில் ஒரே நேரத்தில் வெளியானது.[7] மேலும் இது ஏக் தா சோல்டிர் என்ற பெயரில் இந்தி மொழியில் மொழிமாற்றப்பட்டது. இது பெருமளவு எதிர்மறைக் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் இது வசூலில் பெரும் இழப்பைச் சந்தித்தது.

கதை

[தொகு]

ஐஸ்வர்யா (இலியானா) மத்திய அமைச்சர் மகாதேவராயாவின் (பிரபு கணேசன்) மகளாவார். ஐஸ்வர்யா நண்பர்களுடன் பயணம் மேற்கோள்ள தந்தையிடம் ஓப்புதல் கேட்கும்போது அவர் பாதுகாப்பு காரணங்களால், அனுமதிப்பதில்லை என்பதால், அவர் தன் தந்தைக்குக் தெரியாமலேயே பயணம் செல்கிறார். பயணத்தின்போது அவர் ஒரு வழிகாட்டியான, சக்தியை (ஜூனியர் என்.டி.ஆர்) சந்திக்கிறார். சக்தியின் வழிகாட்டுதலில் அவர் பல இடங்களுக்கு ஒரு பயணம் மேற்கொள்கிறார். சக்தியும் இதைப் பயன்படுத்திக்கொண்டு ஐஸ்வர்யாவிடம் பணம் சம்பாதிக்கிறார். ஒரு ஆபத்தில் இருந்து ஐஸ்ர்யாவை சக்கி காப்பாற்றுகிறார். இதனால் ​​அவள் அவனை விரும்பத்தொடங்குகிறாள். இந்நிலையில் ஐஸ்வர்யாவை தேடிவரும் சிலர் இறுதியாக அவளை அரித்துவாரில் கண்டுபிடித்து, அவளைக் காயப்படுத்தி, சக்தியைக் கொல்ல முயலுகிறார்கள். சக்தியால் அவர்களின் திட்டம் தோல்வியடைகிறது. ஐஸ்வர்யா தனது தந்தையிடம் திரும்பிச் செல்கையில், அவளை மன்னிக்கிறார், தங்கள் வசமுள்ள புனித வைரமுடைய பெட்டியை எடுத்தாயா என்று கேட்கிறார். அதற்கு எதிர்துதப் பேசும் ஐஸ்வர்யாவை தன் மகளான உன்னைவிட அந்தக் கல் மிக முக்கியமானது என்று கடிந்துகொள்கிறார். கோயிலுக்கு சென்றுன்ன ஐசுவர்யாவை உடனடியாக அந்தப் பெட்டியுடன் ஹம்பிக்கு அழைத்து வரும்படி மஹாதேவராயா ஆளனுப்புகிறார். அவர்கள் கிளம்பிச் செல்லும் வழியில் எகிப்தைச் சேர்ந்த பக்தியோ (பூஜா பேடி) மற்றும் அவள் மகன் ராக்கா போன்றோர் அடங்கிய கும்பல் பெட்டியைக் கைப்பற்ற வழிமறிக்கிறது. அவர்களிடம் இருந்து சக்கி அவரையும் பெட்டியையும் காப்பாற்றி மகாதேவராயாவிடம் அழைத்துச் செல்கிறார். மகாதேவராயாவும் சுவாமியும் (நசார்) அவரிடம், அந்தக் கல் குறிந்த பழங்கதையை வெளிப்படுத்துகின்றனர்.

மஹாதேவராயாவின் தந்தை விஜயராயா (எஸ்.பி. பாலாசுப்ரமணியம்) ஒரு அரசர் ஆவார். அவர் கடவுளின் ஆசீர்வாதத்தால் ஒரு வைரக்கல்லை அடைகிறார், அவர் அந்தக் கல்லைத் தொட்டதும், அது பிரகாசமாக வெளிச்சத்தைப் பொழிகிறது. அது மிகவும் சக்கிவாய்ந்த கல் என்றும் இதனால் நாட்டுக்கு மிகவும் நன்மை என்றும் அறிகிறார். இந்தக் கல்லை பாதுகாக்க ருத்ரா (ஜூனியர் என்.டி.ஆர்.) என்பவரை பாதுகாவலராக அரசர் நியமிக்கிறார். அவர் அந்த்தக் கல்லின் சக்கியை அறிந்த எகிப்து அரசர் அதைக் கைப்பற்ற முயல்கிறார். அவர்களிடம் இருந்து அந்தப் புனிதக் கல்லைக் காக்க ருத்ரா தன் உயிரை அளிக்கிறார். அவரின் மகன்தான் சக்தி என மகாதேவராயா கூறுகிறார். இந்தக் கல்லை மீண்டும் கைப்பற்ற அந்த எகிப்தியர்களின் அடுத்தத் தலைமுறையும் வந்துள்ளதாக மகாதேவராயர் கூறுகிறார். அவர்களே அந்த எகிப்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல் எப்பதை அறிந்த சக்தி அவர்களிடம் இருந்து வைரத்தாக் காக்க போராடி அவர்களை வீழ்த்தி அவர்களிடம் அந்தப் புனிதக் கல்லைக் காப்பாற்றி அதன்வழியாக இந்தியாவையும் மற்ற உலக நாடுகளையும் காக்கின்றார்

நடிகர்கள்

[தொகு]

வசூல்

[தொகு]

படம் அதன் முதல் நாளில் ரூ 4.25 கோடி (பங்கு) வசூலித்து பெரும் வரவேற்பைப் பெற்றது.[8]   வார இறுதியில் இது ரூ 10 கோடி என்னும் மிக நல்ல வசூலை ஈட்டியது.[9] படமானது அமெரிக்காவில் மிக நல்ல துவக்க வசூலாக $ 89,571 ( ரூ 55.57 லட்சம்) 3 நாட்களில் ஈட்டியது.[10]

இசை

[தொகு]

படத்திற்கு மணிசர்மா இசையமைத்தார். படத்தின் பாடல்கள் 2011 பெப்ரவரி 27  அன்று வெளியானது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vidyut Jamwal plays negative lead in Billa 2". 14 November 2011 இம் மூலத்தில் இருந்து 26 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120326191555/http://www.kuraltv.com/news/vidyut-jamwal-plays-negative-lead-in-billa-2/. 
  2. "Manjari opposite NTR". Sify.com. 28 October 2010. பார்க்கப்பட்ட நாள் 18 October 2011.
  3. "Movie Review:Review: Shakti disappoints". Sify.com. பார்க்கப்பட்ட நாள் 18 October 2011.
  4. "Review: Shakti is a wasted effort – Rediff.com Movies". Rediff.com. 1 April 2011. பார்க்கப்பட்ட நாள் 18 October 2011.
  5. "Shakthi Telugu Movie Review – cinema preview stills gallery trailer video clips showtimes". IndiaGlitz. 1 April 2011. பார்க்கப்பட்ட நாள் 18 October 2011.
  6. "Shakti Movie Review – NTR, Ileana, Pooja Bedi and others". 123telugu.com. பார்க்கப்பட்ட நாள் 18 October 2011.
  7. "NTR's Shakthi in Tamil". Sify.com. பார்க்கப்பட்ட நாள் 18 October 2011.
  8. Shakti 1st Day Collections. AndhraBoxOffice.com (3 April 2011). Retrieved on 2015-09-07.
  9. Shakti 3 Days Collections. AndhraBoxOffice.com (5 April 2011). Retrieved on 2015-09-07.
  10. Shakti 3 Days US Collections ( only Rentrak listed ). AndhraBoxOffice.com (7 April 2011). Retrieved on 2015-09-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_(2011_திரைப்படம்)&oldid=4117213" இலிருந்து மீள்விக்கப்பட்டது