குத்தாட்டப் பாடல்
ஐட்டம் நம்பர் (Item Number) அல்லது குத்தாட்டப் பாடல் அல்லது குத்துப்பாட்டு என்பது இந்தியத் திரைப்படங்களில் வரும் ஒரு பாடல் காட்சி. திரைக்கதைக்கு சம்பந்தமற்ற இப்பாடல் காட்சிகள் கவர்ச்சியான உடையில் பாலிச்சையைத் தூண்டும் வண்ணம் நடனமாடும் பெண்களைக் காட்சிப்படுத்துகின்றன; வர்த்தக ரீதியாக படத்தின் வெற்றிக்கும் உதவுகின்றன.[1]
விவரம்
[தொகு]இத்தகைய பாடல் காட்சிகள் காட்சியமைப்பில் மட்டுமல்லாமல் இரட்டை அர்த்த பாடல் வரிகளின் மூலமாகவும் கேட்பவரின் பாலிச்சையைத் தூண்ட உதவுகின்றன. பொதுவாக இப்பாடல் காட்சிகள் திரைப்படத்துக்கு விளம்பரம் செய்வதற்காகவும் எதிர்பார்ப்பை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. திரைக்கதைக்கு தொடர்பில்லாவிட்டாலும், வெற்றியடையக்கூடிய பாடல்களை படத்தின் இசை வெளியீட்டில் சேர்க்கவும், படத்திற்கான விளம்பர நிழழ்படத் துண்டில் (trailer) சேர்க்கவும், வானொலி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி விளம்பரம் தேடவும் இவை உதவுவதால், இந்தியத் திரைப்பட இயக்குனர்கள் இவற்றை விரும்பி தங்கள் திரைப்படங்களில் இணைக்கின்றனர். இவ்வழக்கம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் தொடங்கி இப்போது நேபாள மொழி திரைப்படங்களுக்கும் பரவியுள்ளது. பல குத்தாட்டப் பாடல்களில் திரைப்படத்தின் கதை மாந்தரே பங்கு பெறலாம், அல்லது இதற்காக வேறு நடிக நடிகையர் சிறப்புத் தோற்றத்தில் தோன்றலாம்.[1][2][3][4]
இத்தகைய பாடல் காட்சிகளில் தோன்றும் பெண் நடிகை அல்லது நடனக் கலைஞர் குத்தாட்ட நடிகை/ஐட்டம் கேர்ல் (Item girl) என்றழைக்கப் படுகிறார். பொதுவாக நடிகைகள் மட்டுமே குத்தாட்டப் பாடல்களில் தோன்றுகின்றனர்; எனினும் சில இந்தித் திரைப்படங்களில் பிரபல நடிகர்களும் ஐட்டம் பாய்களாகத் (Item boy) தோன்றியுள்ளனர். இப்படி அறிமுகமாகும் நடிகைகள் பொதுவாக இத்தகைய பாடல் காட்சிகளில் தோன்றுபவர்கள் என்று முத்திரைக் குத்தப்பட்டாலும், அவர்களுள் பலர் முன்னணி திரைப்பட நடிகைகளாக மாறியுள்ளனர். முன்னணி கதாநாயகிகள் தங்கள் திரைப்படச் சந்தை சரிந்த பின்னர், குத்தாட்ட நடிகைகளாக மாறுவதுமுண்டு.[5]
”ஐட்டம் நம்பர்” என்ற சொற்றொடர் எங்கிருந்து உருவானது என்பது தெளிவாக அறியப்படவில்லை. “ஐட்டம்” என்ற சொல்லுக்கு மும்பை நகர பேச்சு வழக்கில் ”கவர்ச்சியான பெண்” என்ற பொருள் உள்ளதால், அதிலிருந்து “ஐட்டம் நம்பர்” உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. குத்தாட்டப் பாடல்கள், ஆரம்பத்தில் நடன விடுதிகளில் ஒரு பெண் நடனமாடுவது போல் காட்சியமைக்கப் பட்டிருந்தாலும், காலப்போக்கில் பொது இடங்கள், நடன மேடைகள் ஆகிய இடங்களில் பலர் நடனமாடுவது போலவும் காட்சிப்படுத்துவது வழக்கமாகிவிட்டது.
வரலாறு
[தொகு]இந்தி திரைப்படத்துறை
[தொகு]50களின் ஆரம்பத்தில் இந்தித் திரையுலகில் குக்கூ என்ற ஆங்கிலோ-இந்தியப் பெண் கவர்ச்சி நடனங்களுக்காக பிரபலமடைந்தார். இதன் பின்னர் பல திரைப்படங்களில் இத்தகைய பாடல்கள் பயன்படுத்தப்படலாயின.[6][7] 1950களிலிருந்து 70கள் வரை ஹெலன் என்ற இந்தி நடிகையே மிகப்புகழ்பெற்ற குத்தாட்ட நடிகையாக விளங்கினார். மேரா நாம் சின் சின் சூ, (ஹவ்ரா பிரிட்ஜ், 1958), பியா து அப் தோ ஆஜா (கேரவன், 1971), மெகுபூபா மெகுபூபா (ஷோலே, 1975), யே மேரா தில் (டான், 1978) ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க குத்தாட்டப்பாடல் தோற்றங்கள்.[8][9]
1970களின் ஆரம்பகட்டத்தில் பிந்து, அருணா இரானி, பத்மா கன்னா போன்ற குத்தாட்ட நடிகைகளும் புகழ்பெறத் தொடங்கினர். 80களில் சீனத் அமான், பர்வீன் பாபி போன்றவர்களும் இத்துறையில் புகழ்பெற்றனர்.[10][11][12] இந்தித் திரைப்படத்துறையில் 80களில் கதாநாயகிகளே குத்தாட்டப் பாடல்களில் நடனமாடும் வழக்கம் அறிமுகமாகி வேகமாகப் பரவியது. வெளிப்படையாக கவர்ச்சி காட்டும் கதாநாயகிப் பாத்திரங்கள் பார்வையாளர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்பட்டதே இவ்வழக்கம் பரவ உறுதுணையாக இருந்தது.[3][13] குத்தாட்டப்பாடல்களில் தோன்றி புகழ்பெற்ற முதல் முன்னணி இந்தித் திரைப்பட கதாநாயகி மாதுரி தீட்சித்.[14] ஏக் தோ தீன் (தேசாப்), சோளி கே பீச்சே கியா ஹை (கல்நாயக்), தக் தக் (பேட்டா) ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க குத்தாட்டப்பாடல் தோற்றங்கள்.[14][15] அதன் பிறகு பல முன்னணி நடிகைகள் குத்தாட்டப்பாடலகளில் தோன்றி உள்ளனர்.அதில் குறிப்பிடதக்க ஒன்று 1998ல் வெளிவந்த தில் சே படத்தில் இடம்பெற்ற "சைய்யா சைய்யா" பாடல். இதில் ஹிந்தி நடிகை மலைக்கா அரோரா ஷாருக்கானூடன் ரயிலின் மேல் நின்று ஆடிய குத்தாட்டம் ஹிந்தி மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்தது. முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் 2005ல் பண்டி ஔர் பப்ளி படத்தில் கஜறா ரே பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார்.[6][16]
2007ல் குரு படத்தில் மைய்யா மைய்யா பாடலுக்கும்,ஆப் கா சுரூர் படத்தில் ஷோலே(1975)வின் மெகுபூபா மெகுபூபா பாடலின் ரீமிக்ஸ் பாடலுக்கும் மல்லிகா செராவத்தின் நடனம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.[17][18][19][20] 2010ல் வெளிவந்த தபங்க்க் படத்தில் முன்னி பத்னாம் பாடலுக்கு "சைய்யா சைய்யா" புகழ் மலைக்க அரோராவும், டீஸ் மார் கான் படத்தில் ஷீலா கி ஜவானி குத்தாட்டப் பாடலுக்கு நடிகை கேட்ரீனா கய்ஃப்பும் ஆடிய ஆட்டம் இந்தித் திரை உலகில் பெரும் வரவேற்பு பெற்றது.[21][22] சில இந்தித் திரைப்படங்களில் ஆண் நடிகர்களும் குத்தாட்டப் பாடல்களில் தோன்றியுள்ளனர்.
தமிழ்த் திரைப்படத்துறை
[தொகு]தமிழ்த் திரைப்படங்களில் கவர்ச்சி நடனம் என்பது முதல் பேசும் படமான காளிதாசிலிருந்தே துவங்கி விட்டது. இதில் கதாநாயகி டி. பி. ராஜலட்சுமி கதைக்கு நேரடியாக சம்பந்தமில்லாத “குறத்தி நடனம்” ஒன்றை ஆடியுள்ளார்.[23] ஆனால் பின்னர் கதாயாகிகளை வெளிப்படையாக கவர்ச்சிக்கு பயன்படுத்தும் வழக்கம் குறைந்து போனது. 1960கள் வரை இந்தி மற்றும் தமிழ்த் திரைப்படங்கள் கவர்ச்சிக்காகவும், பார்வையாளர்களிடையே கிளர்ச்சி ஏற்படுத்தவும். விபச்சாரி, காபரே நடன மங்கை, ஆடவரை மயக்கும் தீய பெண் பொன்ற சமூகத்தால் இழிவாகப் பார்க்கப்பட்ட கதாபாத்திரங்களையே பயன்படுத்தின. படங்களில் ஈடுபடும் கவர்ச்சிப் பாடல்களில் இத்தகு பாத்திரங்களே தோன்றுவர். கதையின் நாயகி பாடல் காட்சிகளில் தோன்றினாலும் கவர்ச்சியான உடைகள், நடன அசைவுகள் அவற்றில் இடம் பெறாது. மேற்சொன்ன “தீய பெண்” பாத்திரங்கள் மட்டுமே இத்தகு பாடல்களில் தோன்றுவர். அவர்கள் மது அருந்துவது, பாலியல் இச்சையை வெளிப்படையாகக் காட்டுவது என்று காட்சிகள் அமைக்கப்பட்டன.[3]
1940ல் வெளியான சகுந்தலையில் கவர்ச்சிக்காக சென்னை கன்னிமாரா விடுதியில் காபரே நடனம் ஆடிக் கொண்டிருந்த ஐரோப்பியப் பெண் ஒருவரை இயக்குனர் எல்லிஸ் டங்கன் இறுக்கமான நீச்சல் உடையில் நடனமாடும் கடல் கன்னியாக நடிக்கச் செய்திருந்தார். ஆனால் எக்காரணத்தினாலோ இவ்வழக்கம் தமிழ்த் திரையுலகில் தொடரவில்லை.இந்த வழக்கம் 1950களில் ஆரம்பத்தில் இந்தித் திரைப்படங்களில் ஆரம்பித்தது.
தமிழ்த் திரைப்படங்களில் 1960களிலும் 70களிலும் விஜயலலிதா, சி.ஐ.டி சகுந்தலா, ஆலம், ஜெயகுமாரி, ஜோதிலட்சுமி,[24], ஜெயமாலினி[25] போன்றோர் குத்தாட்டப் பாடல்களுக்கு புகழ்பெற்றவர்களாக இருந்தனர். 80களில் அனுராதா[26], சில்க் சுமிதா, டிசுக்கோ சாந்தி[27] ஆகியோர் பெயர் பெற்றிருந்தனர். குத்தாட்டப் பாடல்களுக்கும் கவர்ச்சிக் காட்சிகளுக்குமென மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட சிலுக்கு சுமிதா பெரும்புகழ் பெற்று கதாநாயகியாக நடிக்குமளவுக்கு உயர்ந்தார்.[28][29] இக்கட்டத்துக்குப் பின்னர் கதாநாயகியாக நடித்தவர்கள், தொழில் வாழ்க்கையில் சரிவு ஏற்பட்ட பின்னர், குத்தாட்டப் பாடல் நடிகைகளாக மாறத் தொடங்கினர். இவ்வாறு நாயகியாக இருந்து பின் குத்தாட்ட நடிகைகளாக மாறியவர்கள் மற்றும் கதாநாயகியாக இருந்துகொண்டு குத்தாட்டப் பாடல்களில் ஆடும் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர்களின் பட்டியல் கீழ்வருமாறு[30] ,
குத்தாட்டப் பாடல்களில் ஆடிய நடிகைகள் சிலர்
[தொகு]நடிகை | திரைப்படம் | வருடம் | பாடல் |
---|---|---|---|
குயிலி [31] | நாயகன் | 1987 | நிலா அது வானத்து |
கெளதமி [32] | ஜென்டில்மேன் | 1993 | சிக்கு புக்கு ரயிலு |
சிம்ரன் [33][34] | அந்தப்புரம்/யூத் | 1999/2002 | மானா மதுரை மல்லிகை பூ/ஆல் தோட்ட பூபதி |
மீனா [35] | ஷாஜஹான் | 2001 | சரக்கு வச்சிருக்கேன் |
நக்மா [36] | தீனா | 2001 | வத்திகுச்சி பத்திக்காதுடா |
ரீமா சென் [37] | ஜே ஜே | 2003 | மே மாதம் 98ல் |
மாளவிகா [38][39] | சித்திரம் பேசுதடி | 2006 | வாளமீனுக்கும் |
சிரேயா சரன் [39] | இந்திரலோகத்தில் நா அழகப்பன் | 2008 | மல்லிகா செராவத்தா |
நயன்தாரா [40] | சிவகாசி | 2005 | கோடம்பாக்கம் ஏரியா |
நிகிதா துக்ரல் [41] | சரோஜா | 2008 | கோடான கோடி |
கிரண் [42] | திருமலை | 2003 | வாடியம்மா ஜக்கம்மா |
ரம்யா கிருஷ்ணன் [43][44][45] | ரிதம் | 2000 | ஐயோ பத்திக்கிச்சு |
ரம்யா கிருஷ்ணன் [43][44][45] | காக்க காக்க | 2003 | தூது வருமா |
ரம்யா கிருஷ்ணன் [43][44][45] | குத்து (திரைப்படம்) | 2004 | போட்டு தாக்கு |
செரின் [46][47][48][49] | பீமா | 2008 | ரங்கு ரங்கம்மா |
கஸ்தூரி [50][51] | தமிழ் படம் | 2010 | குத்து விளக்கு |
லட்சுமி ராய் [52] | பெண் சிங்கம் | 2010 | ஆடி அசையும் இடுப்பு |
1999ல் மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் குத்தாட்ட நடிகையாக பத்தாண்டுகளுக்கு தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் மும்தாஜ்.[53] இவருக்கு குஷி(2000) படத்தின் கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல் முலம் பிரபலமனார். அதன் பிறகு பட்ஜெட் பத்மநாபன் (2000), லூட்டி (2001), மிட்டா மிராசு(2001),அழகான நாட்கள் (2001), வேதம் (2001), ஏழுமலை (2002), மஹா நடிகன் (2003), லண்டன் (2005), ஜெர்ரி (2006),ராஜாதி ராஜா(2009) போன்ற படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து குத்தாட்டமும் ஆடியுள்ளார். ரோஜா கூட்டம் (2001), ஸ்டார் (2001), தேவதையை கண்டேன் (2004), ஏய் (2004), குத்து (2004) போன்ற படங்களில் குத்தாட்டம் ஆடியுள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு வீராசாமி (2007) படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். [54] [55] [56] [57] [58]
இந்தித் திரைப்படங்களைப் போன்று, கதாநாயகிகளே குத்தாட்டப் பாடல்களில் தோன்றுவது தமிழ் திரைப்படத்துறையிலும் வழக்கமாகி விட்டது. இருப்பினும் முமைத் கான், ரகசியா போன்ற குத்தாட்ட நடிகைகள் தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து தோன்றி வருகிறார்கள்.ரகசியா, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்(2004) படத்தில் சிரிச்சி சிரிச்சி வந்தா பாடலுக்கு ஆடி அறிமுகமானார்.[59] அதன் பிறகு அட்டகாசம்(2004), பிப்ரவரி 14(2005), டிஷ்யூம்(2006) மற்றும் பல படங்களின் குத்தாட்டப்பாடல்களில் நடனமாடியுள்ளர்.[60]
இதேபோல் முமைத் கான், போக்கிரி(2007) படத்தில் என் செல்லப்பேரு ஆப்பிள் ,கந்தசாமி (2009) படத்தில் என் பேரு மீனாகுமாரி மற்றும் பல படங்களில் குத்தாட்டப் பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார்.[39][61][62] வேட்டையாடு விளையாடு(2006) படத்தில் நெருப்பே மற்றும் வில்லு(2009) படத்தில் டாடி மம்மி பாடல்களுக்கு,தனது தங்கை சபய்ன் கானுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார்.[63] தொப்புள் நகை (Navel piercing) அணிந்த முதல் தென்னிந்திய குத்தாட்ட நடிகை என்ற பெருமை முமைத் கானுக்கு உண்டு.[64][65][66][67]
மும்பையை சேர்ந்த இரச்சனா மௌர்யா யாரடி நீ மோகினி (2008), சிலம்பாட்டம் (2008), யாவரும் நலம் (2009), துரோகி (2010)[68], ஆயிரம் விளக்கு(2011)[69] மற்றும் பல படங்களின் குத்தாட்டம் ஆடியுள்ளார்.[70][71][72] நான் அவன் இல்லை 2 (2009) படத்தின் 5 கதாநாயகிகளில் இவரும் ஒருவர்.[73]
தற்பொழுது குத்தாட்டப் பாடல்களுக்கு வரவேற்பு குறைந்து உள்ளது. 2011ல் வெடி,முரண்,ஆயிரம் விளக்கு,வேலூர் மாவட்டம் போன்ற திரைப்படங்களின் குத்தாட்டப் பாடல்கள் வரவேற்பு பெறவில்லை.இதற்கு ஒரு காரணம், இவை தேவையற்ற திணிப்பாக இந்தக்கால ரசிகர்களால் கருதப்படுகின்றன என்றும் மற்றோரு காரணமாக இந்த பாடல்கள் வெற்றிப் பாடல்கள் ஆவதில்லை என்றும் சொல்லப்படுகின்றன.[74]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Barrett, Grant (2006). The official dictionary of unofficial English: a crunk omnibus for thrillionaires and bampots for the Ecozoic Age. McGraw-Hill Professional. p. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0071458042. பார்க்கப்பட்ட நாள் 9 November 2010.
{{cite book}}
: More than one of|pages=
and|page=
specified (help) - ↑ "Journals : Item number defined". Archived from the original on 2008-04-07. பார்க்கப்பட்ட நாள் 2011-01-02.
- ↑ 3.0 3.1 3.2 Morey, Peter (2005). Peter Morey and Alex Tickell (ed.). Alternative Indias: writing, nation and communalism. Rodopi. p. 221,178. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9042019271. பார்க்கப்பட்ட நாள் 9 November 2010.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Bhattacharya Mehta, Rini (2010). Bollywood and Globalization: Indian Popular Cinema, Nation, and Diaspora. Anthem Press. p. 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1843318334.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Gera Roy, Anjali. "The Body of New Asian Dance Music". SSRN. பார்க்கப்பட்ட நாள் 10 November 2010.
- ↑ 6.0 6.1 "Bollywood item numbers: from Monica to Munni". 2010. Archived from the original on 22 ஜூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 16 November 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Reminiscences on Directing M.S., the Musician-Movie Star by Ellis R. Dungan
- ↑ Anandam P, Kavoori (2008). Global Bollywood. NYU Press. p. 187. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 081474799X.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help) - ↑ Mukherjee, Madhurita (3 February 2003). "Revamping Bollywood's sexy vamps". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Revamping-Bollywoods-sexy-vamps-/articleshow/36310778.cms. பார்த்த நாள்: 12 November 2010.
- ↑ Gulzar; Nihalani, Govind; Chatterji, Saibal (2003). Encyclopaedia of Hindi Cinema. Popular Prakashan. p. 108. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8179910660.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Parveen Babi dies, alone in death as in life". Times of India. 22 Jan 2005. http://timesofindia.indiatimes.com/articleshow/998438.cms. பார்த்த நாள்: 13 November 2010.
- ↑ Deshpande, Anirudh (2009). Class, Power And Consciousness In Indian Cinema And Television. Primus Books. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788190891820.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help) - ↑ Shresthova, Sangita. "Strictly Bollywood? Story Camera Movement in Hindi Film Dance" (PDF). MIT. பார்க்கப்பட்ட நாள் 12 November 2010.
- ↑ 14.0 14.1 Ganti, Tejaswini (2004). Bollywood: a guidebook to popular Hindi cinema. Routledge. p. 254. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415288533. பார்க்கப்பட்ட நாள் 9 November 2010.
{{cite book}}
: More than one of|pages=
and|page=
specified (help) - ↑ Bhattacharya, Roshmila (21 November 2010). "Our heart goes dhak dhak again". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 29 நவம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101129105626/http://www.hindustantimes.com/Our-hearts-go-dhak-dhak-again/Article1-629156.aspx. பார்த்த நாள்: 29 November 2010.
- ↑ Top 10 Navels in Cinema - Bollywood top 10 navel showing actresses - India Today
- ↑ Mallika"s Raavan dance - India Today
- ↑ Mallika Sherawat is the Queen of Belly Dancing! - Rajiv Dutta - IndiaTarget.com
- ↑ The secret behind Mallika's hot looks! - Times Of India[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Sexy Belly Dance Getting Hot Response - GreatAndhra.com
- ↑ Rise of the Navel - 'Bollywood navel fashion has led to re-emergence of sari' - India Today
- ↑ Navel is the new cleavage for sexy Indian women
- ↑ நாராயணன், அறந்தை (2008). ஆரம்பகால தமிழ் சினிமா (1931-1941) (in Tamil). சென்னை: விஜயா பதிப்பகம். pp. 10–11. ISBN.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ Jyothi Lakshmi
- ↑ Jayamalini
- ↑ Anuradha
- ↑ Disco Shanthi
- ↑ Silk Smitha-1
- ↑ Silk Smitha-2
- ↑ History of Item Girls in Tamil Cinema
- ↑ "Of Item Girls and Sarees". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ "Actress Gouthami Profile". Archived from the original on 2012-07-23. பார்க்கப்பட்ட நாள் 2012-07-23.
- ↑ Simran
- ↑ Youth - All Thotta Boopathi
- ↑ Sarakku Vachiruken- Shahjahan
- ↑ Vathikuchi Pathikadhuda - Dheena [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Reema Sen - Interview[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Malavika
- ↑ 39.0 39.1 39.2 "Where are all the item girls? - Times Of India". Archived from the original on 2013-10-23. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Nayanthara
- ↑ "Punjabi lass who created waves in southern films". Archived from the original on 2011-10-01. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Vijay & Kiran in Vaadiamma Jakkamma (Thirumalai)
- ↑ 43.0 43.1 43.2 Ramya Krishnan
- ↑ 44.0 44.1 44.2 "Kaakha Kaakha Review - sify.com". Archived from the original on 2007-12-04. பார்க்கப்பட்ட நாள் 2011-10-05.
- ↑ 45.0 45.1 45.2 Kuthu Review - Indiaglitz
- ↑ Sherin in Rangu Rangamma
- ↑ Sherin dances with Vikram[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Sherin`s Item Number[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Real Examination for Sherin". Archived from the original on 2011-12-11. பார்க்கப்பட்ட நாள் 2011-10-21.
- ↑ "Kashuri turn's Item song dancer for Dayanidhi Alagiri's Venture". Archived from the original on 2012-01-24. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
- ↑ "Homely Heroine Is Item Bomb!!!". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
- ↑ Lakshmi Rai ignores pains and dances to perfection
- ↑ Mumtaz
- ↑ Mumtaj Filmography
- ↑ "Mumtaj - Tamil Actress Profile". Archived from the original on 2010-12-19. பார்க்கப்பட்ட நாள் 2011-10-03.
- ↑ "Mumtaz the most sizzling actress in Tamil". Archived from the original on 2011-10-19. பார்க்கப்பட்ட நாள் 2011-10-03.
- ↑ Mumtaj - Tamil Actress Films (Filmography)[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Top 10 Item girls of South Cinema". Archived from the original on 2011-11-05. பார்க்கப்பட்ட நாள் 2011-10-03.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Ragasiya
- ↑ "Ragasiya serious about item song dances - Dailomo.com". Archived from the original on 2011-10-23. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ Mumaith Khan-1
- ↑ Mumaith Khan-2
- ↑ Item girl Mumaith Khan back in K'wood
- ↑ "Navel or Nipple ?". Archived from the original on 2011-10-09. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ Mumaith Khan - Profile[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Mumaith Khan -Biography
- ↑ Mumaith Khan - Portfolio
- ↑ Rachana Maurya in Drohi
- ↑ Rachana Maurya in Aayiram Vilakku[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Don't call me an item girl-Rachna - Times Of India". Archived from the original on 2012-11-04. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Rachna Maurya-Proud to be an item girl - sify.com". Archived from the original on 2012-10-18. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Rachna Maurya profile" (PDF). Archived from the original (PDF) on 2011-12-16. பார்க்கப்பட்ட நாள் 2011-10-05.
- ↑ Rachana Maurya Filmography
- ↑ Is item numbers turning cold in Kollywood ? - sify.com
வெளி இணைப்புகள்
[தொகு]- Bollywood's item numbers: Boon or bane? Times of India, 16 September 2002