கிழக்கு சாவகம்
கிழக்கு சாவகம்
East Java ஜாவா திமூர் | |
---|---|
குறிக்கோளுரை: Jer Basuki Mawa Béya (சாவகம்) (பெருந்தன்மையைப் பெற முயற்சி தேவை) | |
இந்தோனேசியாவில் கிழக்கு சாவகத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தோனேசியா |
தலைநகர் | சுராபாயா |
அரசு | |
• ஆளுனர் | செயிகார்வோ |
பரப்பளவு | |
• மொத்தம் | 47,799.75 km2 (18,455.59 sq mi) |
மக்கள்தொகை (2014)[1] | |
• மொத்தம் | 3,85,29,481 |
• அடர்த்தி | 810/km2 (2,100/sq mi) |
மக்கள் வகைப்பாடு | |
• இனக் குழு | சாவகத்தவர் (80%), மதுரா (18%), சீனர் (2%)[2] |
• சமயம் | இசுலாம் (96.36%), கிறித்தவம் (2.4%), பௌத்தம் (0.6%), இந்து (0.5%), கன்பூசியம் (0.1%), சாவகத் தொன்னெறி[3] |
• மொழிகள் | இந்தோனேசியம் (அதிகாரபூர்வம்), சாவக மொழிகள் (அரெக்கான், ஓசிங்கு), மதுரா (பிராந்திய) |
நேர வலயம் | ஒசநே+7) |
வாகனப் பதிவு | AE, AG, L, M, N, P, S, W |
மமேசு | ▼ 0.681 (மத்திமம்) |
மமேசு தரம் | 17வது (2014) |
இணையதளம் | www.jatimprov.go.id |
கிழக்கு சாவகம் (East Java, கிழக்கு ஜாவா, இந்தோனேசிய மொழி: Jawa Timur, சாவகம்: Jåwå Wétan)[4] என்பது இந்தோனேசியாவின் ஒரு நுவாக மாகாணம் ஆகும். சாவகத் தீவின் கிழக்கே அமைந்துள்ள இம்மாகாணத்தில் மதுரா, கங்கியன், மாசாலெம்பு ஆகிய தீவுகள் வடக்கு மற்றும் கிழக்கே அமைந்துள்ளன. இதன் தலைநகர் சுராபாயா இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமும், முக்கிய தொழில் மையமும் ஆகும்.
கிழக்கு சாவகத்தின் பரப்பளவு 47,800 கிமீ2 ஆகும். 2010 கணக்கெடுப்பின் படி இங்கு 37,476,757 பேர் வாழ்கின்றனர். இது இந்தோனேசியாவின் இரண்டாவது அதிகூடிய மக்கள்தொகை உள்ள மாகாணம் ஆகும். 2014 சனவரி கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை 38,529,481 ஆகும்.
கிழக்கு சாவகம் மேற்கே நடுச் சாவக மாகாணத்துடன் நில எல்லையைக் கொண்டுள்ளது. வடக்கே சாவகக் கடலும், தெற்கே இந்தியப் பெருங்கடலும் உள்ளன. கிழக்கேயுள்ள ஒடுக்கமான பாலி நீரிணை சாவகத் தீவை பாலியில் இருந்து பிரிக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Estimasi Penduduk Menurut Umur Tunggal Dan Jenis Kelamin 2014 Kementerian Kesehatan" (PDF). Archived from the original (PDF) on 2014-02-08. பார்க்கப்பட்ட நாள் 2016-05-15.
- ↑ Indonesia's Population: Ethnicity and Religion in a Changing Political Landscape. Institute of Southeast Asian Studies. 2003.
- ↑ "Keagamaan 2009". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-05-15.
- ↑ Piwulang Basa Jawa Pepak, S.B. Pramono, hal 148, 2013
வெளி இணைப்புகள்
[தொகு]- Official website பரணிடப்பட்டது 2019-08-06 at the வந்தவழி இயந்திரம்