ஆர். பாலசுப்பிரமணியம்
ஆர். பாலசுப்பிரமணியம் (R. Balasubramaniam) தமிழ் நாடக, திரைப்பட நடிகராவார். இவர் 1930கள் முதல் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]பாலசுப்பிரமணியம் தமிழ்நாடு, சுவாமிமலையில் பிறந்தவர்.[1] தஞ்சாவூர் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து, கும்பகோணத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆசிரியப் பணியுடன் கும்பகோணத்தில் அப்போது புகழ்பெற்றிருந்த வாணி விலாச சபையின் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் பெண் வேடங்களில் கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார்.[1] பட்டாபிராம சாத்திரியார் இராமாயணத்தை பகுதி பகுதியாக நாடகமாக்கி நடத்தி வந்த போது பாலசுப்பிரமணியம் சீதையாக நடித்து வந்தார். ஏ. ராஜகோபால் செட்டியார் இராமனாக நடித்து வந்தார். சில காலத்திலேயே பாலசுப்பிரமணியம் கம்சன், இராவணன் போன்ற வேறு வேடங்களிலும் நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.[1]
பாலசுப்பிரமணியத்தின் நாடகத்தைப் பார்த்த சிறீராமுலு நாயுடு துகாராம் (1938) திரைப்படத்தில் மும்பாஜியாக நடிக்க அவரை ஒப்பந்தம் செய்தார். முசிரி சுப்பிரமணிய ஐயர் இதில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் பாலசுப்பிரமணியம் இராகமாலிகையில் ஒரு பாடலும் பாடினார்.[1] இதன் பின்னர் சீதா ஜனனம், ரம்பையின் காதல், வேதாள உலகம்[2], மனோன்மணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். இறுதியாக 1964 இல் வெளிவந்த கர்ணன் திரைப்படத்திலும், பின்னர் 1971 இல் வெளிவந்த ஆதிபராசக்தி திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
ஆர். பாலசுப்பிரமணியம் ராஜசூயம் (1942) திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதி, நடித்திருந்தார்.[3]
நடித்த திரைப்படங்கள்
[தொகு]- ராஜா தேசிங்கு (1936)
- பிரகலாதா (1939)
- வேதவதி (1941)
- சுபத்ரா அர்ஜூனா (1941)
- ராஜசூயம் (1942)
- தமிழறியும் பெருமாள் (1942)
- ஹரிச்சந்திரா (1944)
- துளசி ஜலந்தர் (1947)
- கடகம் (1947)
- பொன்னருவி (1947)
- மோகினி (1948)
- வேதாள உலகம் (1948)
- திருமழிசை ஆழ்வார் (1948)
- கிருஷ்ண விஜயம் (1950)
- பாரிஜாதம் (1950)
- லைலா மஜ்னு (1950)
- பொன்முடி (1950)
- நால்வர் (1953)
- சொர்க்க வாசல் (1954)
- கனவு (1954)
- கற்புக்கரசி (1957)
- தாய் மகளுக்கு கட்டிய தாலி (1959)
- தங்கப்பதுமை (1959)
- குறவஞ்சி (1960)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 மாரதன் (சனவரி 1949). "நடிக திலகம் ஆர். பாலசுப்பிரமணியம்". பேசும் படம்: பக். 98-108.
- ↑ ராண்டார் கை. "Vedhala Ulagam 1948". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 12 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ ராண்டார் கை. "Rajasuyam (1942)". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 13 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)