அம்ரிதா சேர்கில்
அம்ரிதா சேர்கில் | |
---|---|
பிறப்பு | [1] புடாபெஸ்ட், கங்கேரி இராச்சியம் | 30 சனவரி 1913
இறப்பு | 5 திசம்பர் 1941 லாகூர், பிரித்தானிய இந்தியா (தற்போதைய பாக்கித்தான்) | (அகவை 28)
தேசியம் | இந்தியர் |
கல்வி | Grande Chaumiere இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் (1930–34) |
அறியப்படுவது | ஓவியர் |
அம்ரிதா சேர்கில் (Amrita Sher-Gil, 30, சனவரி 1913–5, திசம்பர் 1941) என்பவர் இந்தியாவின் பெண் ஓவியர். இந்தியாவின் பிரிடா காலோ எனவும் இவர் அழைக்கப்படுகிறார்.[2]
இளமைக்காலம்
[தொகு]பஞ்சாப் சீக்கியத் தந்தைக்கும் அங்கேரி நாட்டின் யூத மதத்தைச் சேர்ந்த தாயாருக்கும் அம்ரிதா சேர்கில் புடாபெசுடு நகரில் பிறந்தார்.[3] 1921 முதல் சிம்லா நகரில் வாழ்ந்து வந்தார். இளம் அகவையிலேயே ஓவியம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது. 1923 ஆம் ஆண்டில் இத்தாலியில் பிலாரன்சு நகரில் கலை மையம் ஒன்றில் மாணவியாகச் சேர்ந்தார்.
ஓவியக் கலைப்பயணம்
[தொகு]ஓவியக்கலையில் மேலும் பயிற்சி பெற 1929 இல் பாரீசு நகருக்குப் போனார். அங்கு கவின் கலையில் இளங்கலைப் பட்டமும் பெற்று மேலை நாட்டு ஓவிய வகைகளையும் கற்றுக்கொண்டார். இளம்பெண்கள் என்ற பெயரில் அம்ரிதா சேர்கில் வரைந்த ஓவியம் மேலை நாட்டுப் பாணியில் அமைந்திருந்தது. 1934 இல் இந்தியாவுக்குத் திரும்பிய இவர் இந்தியாவின் தொன்மைக் கலைகளிலும் இசுலாமிய ஓவியங்களிலும் ஆர்வம் காட்டினார்.
1937 இல் தென்னிந்தியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மணப் பெண்ணின் அறை, பிரம்மச்சாரிகள், தென்னிந்திய கிராமிய வாழ்க்கை என்ற ஓவியப் படைப்புகள் புகழ் பெற்றன. அஜந்தா குகை ஓவியங்களும், இந்திய மக்களின் எளிய வாழ்க்கை நிலைகளும், பெண்களின் நலிந்த வாழ்வும் அம்ரிதாவின் ஓவியங்களில் பதிவாகின.
1938 இல் கொரக்பூரில் வாழ்ந்தபோது இரவிந்திரனாத் தாகூர், ஜமினி ராய் ஆகியோரின் ஓவியங்களைக் கண்டார். அதன் விளைவாக வங்காளத்தில் நிகழ்ந்த கலைப்புரட்சியில் தாமும் இணைந்து கொண்டார். காந்தியக் கொள்கைகளிலும் அம்ரிதா நாட்டம் கொண்டார். 1941இல் லாகூரில் வாழ்ந்து வந்த அம்ரிதா ஒரு ஓவியக் கூடத்தை அமைத்தார். அங்கு ஓவியக் கண்காட்சியை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்த நிலையில் 6 டிசம்பர் 1941 இல் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்தார்[4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Great Minds, The Tribune, 12 March 2000.
- ↑ Amrita Sher-Gill at. Mapsofindia.com.
- ↑ "Budapest Diary". Outlook. 20 September 2010. http://www.outlookindia.com/article.aspx?267032. பார்த்த நாள்: 5 February 2013.
- ↑ Amrita Shergill at. Indiaprofile.com (6 December 1941).
வெளியிணைப்புகள்
[தொகு]வாழ்க்கை
[தொகு]- Amrita Sher-Gil biography, articles and work பரணிடப்பட்டது 2020-02-23 at the வந்தவழி இயந்திரம்.
- Amrita-it.com – A Resource site on Amrita Sher-Gil
- Amrita Sher-Gil Bio, Photos and Paintings பரணிடப்பட்டது 2016-03-22 at the வந்தவழி இயந்திரம்
- Biography of Artist Amrita Sher-Gil and Photos
ஓவியங்கள்
[தொகு]- Amrita Sher-Gil on Art and appreciation
- Amrita Sher-Gil Gallery of Paintings, Bio, Books, Photos பரணிடப்பட்டது 2016-03-22 at the வந்தவழி இயந்திரம்
- Showcase:Amrita Sher-Gil at National Gallery of Modern Art
- A slideshow of Amrita Sher-Gil's painting at Tate Modern பரணிடப்பட்டது 2013-04-21 at Archive.today
- List of most expensive Indian paintings ever sold பரணிடப்பட்டது 2007-10-07 at the வந்தவழி இயந்திரம்
- Amrita Sher-Gil exhibition at Tate Modern, இலண்டன்