[go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

in

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| மு.உ.| prep.

1. (ஒன்றிற்குள்) இருத்தலை (செல்வதைக்) குறிக்கும் சொல்.

I got stuck in a traffic jam = வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டேன்; What's that in your hand? = உன் கைக்குள் என்ன இருக்கின்றது?; they live in a suburb = அவர்கள் புறநகரில் வசிக்கிறார்கள்; they threw him in the ring; களத்திற்குள் அவனை இறக்கினர்

2. (ஒன்றின்) பகுதியாக இருத்தலைக் குறிக்கும் சொல்.

he used to be the head in our company = அவர் எங்கள் நிறுவனத்தின் தலைவராக முன்னர் இருந்தார்; I've been waiting in this queue for ages = நீண்ட நேரமாக இந்த வரிசையில் காத்திருக்கின்றேன்; There are too many mistakes in this solution = இந்தத் தீர்வில் பல தவறுகள் உள்ளன

3. (குறிப்பிட்ட) கால இடைவெளியைக் குறிக்கப் பயன்படும் சொல்

We're going to Shimla in April = ஏப்ரலில் சிம்லாவிற்குச் செல்வோம்; How many civilians died in the civil war? = உள்நாட்டுப் போரில் எத்தனை குடிகள் இறந்தனர்?;

4. காலக்கெடுவைக் குறிக்கப் பயன்படும் சொல்.

Can you finish the job in two weeks? = இரண்டு வாரத்திற்குள் வேலையை முடித்து விடுவாயா?; They completed the journey in record time = பயணத்தை அதிவிரைவில் முடித்தவிட்டனர்; dinner will be ready in ten minutes = பத்து நிமிடத்தில் இரவு உணவு தயாராகி விடும்

5. (ஓர் நிலையை, உணர்வைப்) பட்டறிதலைக் குறிக்கும் சொல்.

You're in great danger = நீ பேராபத்தில் இருக்கின்றாய்; Have you ever been in love? = எப்போதாவது நீ காதலில் வீழ்ந்துள்ளாயா?[1]

6.

ஆங்.| வி.உ.| adv.

1. (ஒன்றினுள்) செல்வதைக் குறிக்கும் சொல்.

Come in = உள்ளே வா

2. (ஒன்றை நோக்கிச்) செல்வதைக் குறிப்பது.

flew in on the first plane = முதல் விமானத்தில் சென்றேன்

3. நெருங்கிய நிலையில் இருத்தலைக் குறிப்பது.

close-in fielders = மட்டை ஆடுபவர்க்கு அருகிலுள்ள வீரர்கள்

4. (ஓரிடத்தில்) இருத்தலைக் குறிக்கும் சொல்.

The doctor is in = மருத்துவர் இருக்கின்றார்


பலுக்கல்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. கேம்பிரிட்சு [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=in&oldid=1993322" இலிருந்து மீள்விக்கப்பட்டது