ஜொசிஃபஸ்
தீத்துஸ் பெலாவியுஸ் ஜொசிஃபஸ் | |
---|---|
ஜொசிஃபஸ் | |
பிறப்பு | மதியாதுவின் மகன் யோசெஃப் 37 AD எருசலேம், யூதேயா |
இறப்பு | அண். 100 |
பெற்றோர் | மத்தியாஸ் |
பிள்ளைகள் | பெலாவியுஸ் ஹைர்கானுஸ் பெலாவியுஸ் சிமோனிதஸ் அர்க்கிப்பு பெலாவியுஸ் ஜுஸ்துஸ் |
தீத்துஸ் பெலாவியுஸ் ஜொசிபஸ் (/dʒoʊˈsiːfəs/;[1] 37 – அண். 100),[2] இயற்பெயர்: மதியாதுவின் மகன் யோசெப் (எபிரேயம்: יוסף בן מתתיהו, Yosef ben Matityahu),[3] என்பவர் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த உரோமை குடியுறிமை பெற்ற யூத வரலாற்றாசிரியரும், அறிஞரும், மரபிலக்கண எழுத்தாளரும் ஆவார். இவர் உரோமையரின் கட்டுப்பாட்டில் இருந்த யூதேயாவின் எருசலேம் நகரில் பிறந்தவர். இவரின் தந்தை யூத குருகுலத்தவர். இவரின் தாய் அரச குலத்தவரும் ஆவார்.
கலிலேயாவில் முதலாம் யூத-உரோமைப் போரின்போது உரோமையர்களை எதிர்த்து இவர் போரிட்டாளும், கிபி 67 இல் தோல்வியைத்தழுவி வெஸ்பசியானிடம் சரணடைந்தார். இவர் யூத மெசியாவைக்குறித்த முன்னறிவிப்புகளில் வெஸ்பசியான் அரசராவார் என இவர் முன்னறிவித்ததார். அவ்வாறே நிகழ்ந்ததால் கிபி 67 இல் வெஸ்பசியான் இவரை விடுவித்தார். அப்போது இவர் அரசரின் குடும்பப்பெயரான பெலாவியுஸை (Flavius) தமதாக்கிக்கொண்டார்.
ஜொசிஃபஸ் முழுவதும் உரோமையருக்கு பணிய முன்வந்ததால் இவருக்கு உரோமை குடியுறிமை வழங்கப்பட்டது. அரசரின் மகன் தீத்துஸ் கி.பி 70இல் எருசலேம் முற்றுகையிட்டு தரைமட்டமாக்கியபோது இவர் அவரின் மொழிபெயர்ப்பாளராகவும் அலோசகராகவும் இருந்தார். இம்முற்றுகையின்போதே யூதர்களின் இரண்டாம் கோவில் இடித்து கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறிக்கத்தக்கது.
இவர் யூத வரலாற்றை முதல் நூற்றாண்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து சித்தரித்துள்ளார். யூதப் போர் (The Jewish War, c. 75) மற்றும் யூத தொன்மையியல் வரலாறு (Antiquities of the Jews c. 94) என்பன இவரின் முக்கியப்படைப்புகள் ஆகும்.[4] இவை முதல் நூற்றாண்டில் யூதத்தின் நிலை மற்றும் ஆதி கிறித்தவர்களின் பின்னணி குறித்து அதிகம் அறிய வழிவகுக்கின்றது.[4]
மேற்கோள்கள்
- ↑ "Josephus" entry in Collins English Dictionary, HarperCollins Publishers, 1998.
- ↑ Louis Feldman, Steve Mason (1999). Flavius Josephus. Brill Academic Publishers.
- ↑ Josephus refers to himself in his Greek works as Ἰώσηπος Ματθίου παῖς, Iōsēpos Matthiou pais (Josephus the son of Matthias). Josephus spoke Aramaic, Hebrew and Greek.
- ↑ 4.0 4.1 Stephen L. Harris, Understanding the Bible, (Palo Alto: மேfield, 1985).